வணிக வீதி

சூழல் பாதுகாப்பு: வழிகாட்டும் புணே அரசு போக்குவரத்து

செய்திப்பிரிவு

சூழல் பாதுகாப்பில் புணே அரசு போக்குவரத்து கழகம் பிற மாநில போக்குவரத்து கழகங்களுக்கு முன்னோடியாக விளங்கப்போகிறது. கழிவிலிருந்து இயற்கை எரிவாயுவை எடுத்து அதன் மூலம் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது இந்நகர நிர்வாகம்.

உயிரி கழிவிலிருந்து இயற்கை எரி வாயுவைத் தயாரிக்கும் ஆலை இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) எடுக்கப்பட்டு அதன் மூலம் அரசு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எரிவாயுவை விநியோகிக்கும் நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக 45 பேருந்துகளை இந்த முறையில் இயக்கிப் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கிலும், அதைப் பிரபலப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கையை புணே மகாநகர் பரிவாகன் மஹாமண்டல் மற்றும் புணே முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகியன இணைந்து எடுத்துள்ளதாக புணே மாநகராட்சி ஆணையர் குணால் குமார் தெரிவித்துள்ளார்.

புணே நிர்வாகம் நாளொன்றுக்கு 1,500 டன் குப்பைகளைக் கையாள்கிறது. பேருந்துகளுக்கான இயற்கை எரிவாயுவை தலேகான் பகுதியில் உள்ள நிலையம் மேற்கொள்கிறது. முதல் கட்டமாக இந்தத் திட்டத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதைத் தொடர்ந்து போக்கு வரத்து அமைச்சகம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ஏஆர்ஏஐ இத்தகைய எரிவாயுவை பஸ்களில் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

மஹாராஷ்டிரா இயற்கை வாயு லிமி டெட் நிறுவனம் இத்திட்டத்தை செயல் படுத்த முன்வந்துள்ளது. பேருந்துகளுக் கான வாயுவை பிம்பிரியில் உள்ள நிரப்பு நிலையம் சப்ளை செய்யும். அத் துடன் இதற்கென பிரத்யேக விநியோக மையம் நிக்டியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகள் முடிவடை யும் தருவாயில் உள்ளன. இதனால் விரைவிலேயே இத்தகைய எரிவாயுவில் இயங்கும் பஸ்கள் புழக்கத்துக்கு வரும் என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.

தற்போது புணே நிர்வாகத்தில் 1,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 500 பேருந்துகள் சிஎன்ஜி-யில் இயக்கப்படுபவையாகும். கழிவு மூலம் பெறப்படும் இயற்கை எரிவாயு மூலம் முதல் கட்டமாக 50 பஸ்கள் இயக்கப்படும். பிறகு இந்த எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சூழல் பாதுகாப்பில் பிற மாநிலங் களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது புணே பெருநகராட்சி நிர்வாகம்.

SCROLL FOR NEXT