மோட்டார் நிறுவனம் புதிய பொலிவுடன் பிரையோ கார்களை அறிமுகம் செய்துள்ளது. இளமையான வெளிப்புறத் தோற்றம், உயர் ரக உள்புறத் தோற்றம் ஆகியவற்றுடன் பல முன்னேறிய தொழில்நுட்பங்களோடு இந்த கார் வெளிவந்துள்ளது.
கருமையான குரோமிய பூச்சு கொண்ட முன்புற கிரில், ஸ்டைலான வடிவத்தைக் கொண்ட முன்புற பம்பர், அழகிய உயர் ரகக் கார்களில் இடம்பெறும் பின்புற விளக்கு, உயர்வாக அமைக்கப்பட்ட பின்புற எச்சரிக்கை விளக்கு ஆகியன பிரையோவின் தோற்றத்தை முழுமையாக மாற்றியுள்ளது.
மிகவும் குளிர்ச்சியான காற்றை அளிக்கும் காற்று அறைகள், புதிதாக வடிவமைக்கப்பட்ட முப்பரிமாண அனலாக் ஸ்போர்டி மீட்டர். வெள்ளை நிற பின்னணி இருப்பதால் மிகவும் அழகான தோற்றம் கிடைக்கிறது. சொகுசு கார்களில் உள்ளதைப் போன்று உள்புறத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இரட்டை காற்றுப் பை, ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம், பாதசாரிகள் பாதிக்கப்படாமல் தடுக்கும் பிஐஎம்டி தொழில்நுட்பம் இதில் உள்ளது.
2011-ம் ஆண்டு பிரையோ அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 87 ஆயிரம் குடும்பத்தினர் இதில் சொகுசாக பயணித்து வருகின்றனர். இப்போது மேம்படுத்தப்பட்ட மாடலான பிரையோ மேலும் பல வாடிக்கையாளர்களை பெற்றுத்தரும் என ஹோண்டா உறுதியாக நம்புகிறது.