வணிக வீதி

புதிய தயாரிப்புகள் அணிவகுத்த லாஸ் ஏஞ்சலீஸ் ஆட்டோ கண்காட்சி

செய்திப்பிரிவு

ஆட்டோமொபைல் துறையினருக்கு ஆக்கமும் உற்சாகமும் அளிக்கும் ஒரே இடம் ஆட்டோ மொபைல் கண்காட்சிகள்தான். தங்களது தயாரிப்பு களுக்கு மக்கள் மத்தியில் எந்த அள வுக்கு வரவேற்பு இருக்கும் என்பதற் கான உரைகல்லாகவும் இது அமை கிறது. இதனால்தான் பெரும்பாலும் சர்வ தேச அளவிலான ஆட்டோமொபைல் கண்காட்சியில் வாகன உற்பத்தியாளர் களின் கூட்டம் அலை மோதுகிறது. இது போன்ற கண்காட்சியில் பங்கேற்பதை கவுரமாகக் கருதி, இதற்கென புதிய தயாரிப்புகளை காட்சிக்கு வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் நிறுவனங்கள் ஏராளம்.

சர்வதேச அளவில் நிகழும் ஆட்டோ மொபைல் கண்காட்சிகளில் லாஸ் ஏஞ்ச லீஸ் கண்காட்சி மிகவும் பிரபலமானது. இம்மாதம் 18-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிக்கு வைத்துள்ளன.

ஆட்டோமொபைல் துறையில் குறிப்பாக கார் தயாரிப்பில் கடந்த 50 ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களை விட அதிக அளவிலான மாற்றங்கள் அடுத்த 5 ஆண்டு கலில் உருவாகும் என்பது இக்கண் காட்சியில் இடம்பெற்றிருந்த கார்களைப் பார்க்கும் அனைவருக்கும் புரியும்.

கடந்த 50 ஆண்டுகளில் பயணத் துக்கு ஒரு வாகனம் என்ற அளவி லிருந்து சொகுசான பயணம், பாதுகாப் பான பயணம் என்ற பல்வேறு நிலை களுக்கு மாறிய கார் தயாரிப்பு இப்போது சமூக சிந்தனையோடு கார்களை தயா ரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. எரிபொருள் சிக்கனம், மிகுந்த செயல் திறன் என்ற நிலைகள் மாறி, சூழல் பாதுகாப்பு என்ற பிரதான நோக்கத்தை இலக்காகக் கொண்டதாக பல நிறுவனத் தயாரிப்புகள் விளங்கின. பெரும்பாலான நிறுவனங்கள் பேட்டரி கார் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதை இக்கண்காட்சி உணர்த்தியது.

ஒருகாலத்தில் ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் இடம்பெறும். ஆனால் லாஜ் ஏஞ்சலீஸ் கண்காட்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்டெல், சிஸ்கோ, கார்மின் போன்ற நிறுவனங்களும் இடம்பெற்றிருந்தன.

கார்களில் இன்டர்நெட் வசதி உள்ளிட்டவற்றை அளிப்பதில் இத்தகை நிறுவனங்களின் பங்களிப்பு கணிசமாக இருப்பது இப்போது பெரிதும் உணரப்பட்டுள்ளது. இது தவிர டிஜிட்டல் பாதுகாப்பு வசதிகளை அளிக்கும் ஆர்கஸ் சைபர் செக்யூரிட்டி, க்யூஎன்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது இடத்தின் அவசியத்தை பறைசாற்றும் வகையில் கண்காட்சியில் அரங்குகளை அமைத்திருந்தன.

பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, ஹூண்டாய், போர்ஷே, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தொழில்நுட்ப வசதி கொண்ட தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தன. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்ட கார்கள் கண்காட்சியில் காண்போரை வெகுவாகக் கவர்ந்தன.

அமேசான் செயலியான எக்கோ மூலம் காரில் ஏசி-யை ஆன் செய்வது மற்றும் குளிர்காலங்களில் ஹீட்டரை போடுவது போன்ற வசதிகளைக் கொண்ட காரை ஹுண்டாய் காட்சிப்படுத்தியிருந்தது.

பிற நிறுவனங்கள் பேட்டரியால் இயங்கும் வாகனங்களை காட்சிப்படுத்தி யிருந்தன. பிஎம்டபிள்யூ நிறுவனம் சொந்தக் காரில் பிறருடன் பகிர்ந்து பயணம் மேற்கொள்ளும் ரீச்நௌ எனும் புதிய முயற்சியை கண்காட்சியில் பிரபலப்படுத்தியது. இத்தகைய வசதி சியாட்டில், போர்ட்லாண்ட், ஒரேகான் ஆகிய மாகாணங்களில் அமலில் உள்ளதையும் பிஎம்டபிள்யூ சுட்டிக் காட்டியது.

ஜாகுவார் நிறுவனம் தனது பேட்டரி எஸ்யுவி ஐ-பேஸ் எனும் காரை இங்கு காட்சிக்கு வைத்திருந்தது. இந்தக் கார் 2018-ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது.

விதவிதமான கார்களின் அணிவகுப்பு, இத்துறையில் நிகழ்ந்து வரும் மிகப் பெரிய தொழில்நுட்ப மாற்றங்களை வெளிப்படுத்துவதாக இருந்தது.

SCROLL FOR NEXT