1694 ஆம் ஆண்டு முதல் 1778 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த வால்டேர், பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவஞானி மற்றும் வரலாற்றாசிரியர். நையாண்டியும், நகைச்சுவையும் கொண்டவரான வால்டேர், சிறுவயது முதலே எழுத்துத்துறையில் ஆர்வம் உடையவராக விளங்கினார். நாடகங்கள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள், வரலாற்று மற்றும் அறிவியல் படைப்புகள் என கிட்டத்தட்ட ஒவ்வொரு இலக்கிய வடிவத்திலும் தனது படைப்புகளைக் கொடுத்து பல்துறை எழுத்தாளராக விளங்கினார். மேலும், கடிதங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் என இவரது படைப்புகள் பரந்து விரிந்ததாக காணப்படுகிறது. மிகச்சிறந்த சமூக சீர்திருத்த ஆதரவாளராகவும், விமர்சகராகவும் விளங்கினார்.
* மென்மையான இதயங்களுக்காக உருவாக்கப்பட்டது சொர்க்கம்; அன்பற்ற இதயங்களுக்காக உருவாக்கப்பட்டது நரகம்.
* துயரத்தின் அமைதி மொழியே கண்ணீர்.
* பாராட்டு என்பது ஒரு அற்புதமான விஷயம்.
* ஒருவரை அவரது பதில்களை விட அவரது கேள்விகளிலிருந்து மதிப்பீடு செய்யுங்கள்.
* மனித குலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று சகிப்புத்தன்மை.
* மிதமான செயல்பாடுகளின் மூலமாகவே பூர்ணத்துவத்தை அடைய முடிகின்றது.
* அநீதி இறுதியில் சுதந்திரத்தை உருவாக்குகின்றது.
* வரலாறு என்பது குற்றங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்களைக் கொண்ட பதிவேடு மட்டுமே.
* மனிதர்கள் வாதிடுகின்றனர். இயற்கை செயல்படுகின்றது.
* உண்மையை நேசி, ஆனால் பிழையை மன்னித்துவிடு.
* கல்வியறிவை விட இயற்கை எப்போதும் அதிக சக்திகளை கொண்டதாக இருந்துள்ளது.
* நான் எங்கு செல்கிறேன் என்று எனக்குத் தெரியாது; ஆனால், நான் என் வழியில் செல்கிறேன்.
* ஒருவரின் மனசாட்சிக்கு எதிராக எதுவும் செய்யாமல் இருப்பதே பாதுகாப்பான ஒன்று.