நாம் சமைக்கும் உணவிற்கு கூடுதல் சுவையைத் தருவது நறுமணப் பொருட்கள். இந்த நறுமணப் பொருட்கள் உணவாக பயன்படுவது மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படுகின்றன. பொதுவாக நறுமணப் பொருட்கள் ஆசிய கண்டத்திலேயே அதிகம் விளைகின்றன. இந்தியாவில் 52 நறுமணப் பொருட்கள் விளைகிறது. பல்வேறு மாநிலங்களில் விளையும் இந்த பணப்பயிர்கள் குறைந்த அளவு உற்பத்தி செய்தாலும் அதிக அளவு லாபத்தை தருவன. ஆண்டு முழுவதும் இந்தப் பொருட்களுக்கு தேவை இருந்துகொண்டே இருக்கின்றன. நறுமணப் பொருட்களில் மிக முக்கியமானன ஏலக்காய், மிளகு, கிராம்பு, முந்திரி பற்றி சில தகவல்கள்….
# இந்தியாவில் 3.15 மில்லியன் ஹெக்டரில் நறுமணப் பொருட்கள் பயிரிடப்படுகிறது.
# 20114-15-ம் ஆண்டில் 88 ஆயிரம் டன் நறுமணப் பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ஏலக்காய்
# மசாலாக்களின் ராணி என்று அழைக்கப்படுவது ஏலக்காய்
# அதிக விலையுடைய வாசனைப் பொருட்களில் ஏலக்காய்க்கான இடம் 3
# ஏலக்காயில் இரண்டு வகை உள்ளது. கருப்பு ஏலக்காய் மற்றும் பச்சை ஏலக்காய்.
# இந்தியாவில் அதிக அளவில் பச்சை ஏலக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.
# நேபாளம் மற்றும் சிக்கிம் ஆகிய நாடுகளில் கருப்பு ஏலக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.
# சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
# ஏலக்காயின் அறிவியல் பெயர் எலேட்ரியா கார்டமொம்
மிளகு
# மொத்தம் ஏழு வகையான மிளகு பயிர் செய்யப்படுகின்றன
# இந்தியாவில் கருப்பு மிளகு அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
# மிளகின் தாவரவியல் பெயர் பைப்பர் நிக்ரம்
# மிளகு இந்தியாவிலிருந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
# மிளகு தென் இந்தியாவில் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.
கிராம்பு
# மருத்துவ பண்புகள் அதிகம் உடைய நறுமணப் பொருள் கிராம்பு
# கிராம்பின் தாவரவியல் பெயர் சைஜியம் அரோமேட்டிகம்
# சோப்புத் தயாரிப்பில் அதிக அளவில் கிராம்பு பயன்படுத்தப்படுகிறது.
முந்திரி
# சர்வதேச அளவில் உற்பத்தி செய்யப்படும் முந்திரியில் இந்தியாவின் பங்கு 65 சதவீதம்
# இந்தியாவிலிருந்து 60 நாடுகளுக்கு முந்திரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
# அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அதிகமாக முந்திரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
# முந்திரி உற்பத்தியில் உள்ள மகாராஷ்டிரம் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தி 33% மகாராஷ்டிரம் வசம் உள்ளது.