இந்தியாவில் மோட்டார் சைக்கிள் என்றாலே கம்பீரத்தின் அடையாளமாகத் திகழ்வது ராயல் என்பீல்டுதான். கால ஓட்டத்தில் மோட்டார் சைக்கிளை பெண்களும் அதிகம் விரும்பி ஓட்டத் தொடங்கியுள்ளனர். இதுவரை ஆண்க ளுக்கு மட்டுமே மோட்டார் சைக்கிள் பயணங்களை நடத்தி வந்த ஐஷர் மோட்டார்ஸ், இப்போது முதல் முறை யாக மகளிர்க்கென்று நீண்ட பயண திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
மகளிர்க்கென இமாலய பயண திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,200 கி.மீ தூரமாகும். பயண நாள்கள் 17. இந்தியாவின் மிக உயர்ந்த மலைப் பகுதியான இமாலய பகுதியில் இந்த பயணம் நடத்தப்படுகிறது. ஜூலை 9-ம் தேதி தொடங்கும் இப்போட்டி யில் பங்கேற்க விரும்பும், சாகசங்களை நாடும் பெண்கள் பெயர்களை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
டெல்லியில் தொடங்கும் இந்தப் போட்டி ஜூலை 9-ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த பயணத்தில் ஆண்களும் பங்கேற்பர். லே, லடாக் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பயணம் அமையும். இந்த போட்டியில் 20 பெண்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக இமாலய பிராந்தியத்தில் பயணம் மேற்கொள்ள மே மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் மிகவும் ஏற்றவை. இதனாலேயே இவ்விரு மாதங்களில் மோட்டார் சைக்கிள் பிரியர்கள் இப்பிராந்தியத்தில் பயணம் மேற்கொள்வர்.
மலைப் பகுதிகளில் வாழ்வோர் மற்றும் சமவெளியில் வாழ்வோர் இடையே ஒரு இணக்கமான சூழலை உருவாக்கும் வகையில் இதுபோன்ற சாகச பயணங்களை 2003-ம் ஆண்டு முதல் ஐஷர் மோட்டார்ஸ் நடத்துகிறது.