இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்து இருப்பதற்கு ஒரே சான்று நம் தேர்தல் முறை. ஒரு தேர்தல் நடத்துவது என்றால் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் மக்கள் தொகையில் 120 கோடியை கடந்து விட்ட இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் மிகவும் கடினம். இந்தியாவில் நடந்த முதல் தேர்தலில் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் வாக்குப்பெட்டியை தூக்கிச்சென்ற காலம் தொட்டு தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வரை இந்திய தேர்தல் முறையில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. அதேபோல் தேர்தல் நடத்துவதற்கு உரிய செலவுகளும் அதிகரித்து வந்துள்ளன. 2014 பொதுத்தேர்தல் நடத்துவதற்கு தோராயமாக 3,600 கோடி ரூபாய் செலவாகியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க ஓட்டுக்கு பணம் கொடுப்பது பொருட்கள் கொடுப்பது என மற்றொரு புறம் பணம் விளையாடுகிறன.
எவ்வளவு கெடுபிடிகள் இருந்தாலும் பண பரிவர்த்தனையைத் தடுக்க முடியவில்லை. தமிழ்நாடு, அசாம், புதுவை, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் 60,000 கோடி ரூபாய் பணப்புழக்கம் இருக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சமீபத்தில் கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருவரின் வாக்குரிமை நிலைநாட்டுவதற்கும் தேர்தல் ஆணையம் செலவிடுகிறது. குறைந்த பட்சம் ஓட்டுக்கு பணம் வாங்காமல் நம் வாக்கை செலுத்துவதுதான் நமது மிகப்பெரிய கடமை. இந்திய தேர்தல் முறையை பற்றியும் பொருளாதார ரீதியாக அதன் பின்புலத்தை பற்றியும் தகவல்கள்…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் செலவிட்ட தொகை ரூ. 148,00,00,000
இதில் தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்ட தொகை ரூ. 82,00,00,000
தமிழக, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் செலவிட்ட தொகை
அதிமுக ரூ. 12,69,03,248
திமுக ரூ. 9,27,87,684
1952 தேர்தலில் வாக்குச்சீட்டுமுறை அறிமுகப்படுத்தப் பட்டது.
1980 எம்.பி.ஹனிபா என்பவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்தார்.
1982 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதன்முதலில் கேரள மாநிலத்தில் வடக்கு பரூர் தொகுதியில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் 50 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்டது.
2016 சட்டமன்ற தேர்தல் வேட்பாளரின் தேர்தல் செலவு வரம்பு ரூ. 28 லட்சம்.
83,40,82,814 2014ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் உள்ள மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை
அதிகபட்சமாக 2004 பொதுத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு தேர்தல் ஆணையம் 17 ரூபாய் செலவிட்டுள்ளது.
பொதுத் தேர்தலின் போது இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,32,12,243
நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரு வாக்காளர் வாக்களிப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையம் செலவிட்ட தொகை 0.6 ரூபாய்
வாக்காளர் தனது வாக்கை செலுத்துவதற்கு குடவோலை முறை பண்டைய காலத்தில் பயன்படுத்தப் பட்டன.
அதிகரித்து வரும் மக்கள் தொகை சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற காரணத்தினால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப் பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தலில் பயன்படுத்தப்படுவதால் 10 ஆயிரம் டன் பேப்பர் மிச்சப்படுத்தப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றின் விலை ரூ. 10,500
பதிவு செய்த வாக்குகளை எண்ணுவதற்கு எளிதாக இருந்தாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையில் பல்வேறு குளறுபடிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
நமீபியா, கென்யா, பூட்டான், பிஜி, நேபாளம் போன்ற நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இறக்குமதி செய்து தேர்தல்களில் பயன்படுத்தி வருகின்றன.
வேட்பாளர் தேர்தல் செலவு வரம்பு ரூ.16 லட்சம்
தோராயமாக 10,00,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
பெரிய மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளருக்கு தேர்தல் செலவுகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.70,00,000
சிறிய மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளருக்கு தேர்தல் செலவுகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ. 59,00,000
2014 பொதுத் தேர்தலில் கட்சிகள் செலவிட்ட தொகை
பாரதிய ஜனதா கட்சி ரூ. 714,28,57,813
தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.51,34,44,854
பகுஜன் சமாஜ்வாதி கட்சி ரூ. 30,05,84,822
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.18,69,18,169
இந்திய தேசிய காங்கிரஸ் ரூ.516,02,36,785
தற்போது நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு 200 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் கணித்துள்ளது.
கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்