லாவோ சூ சீனாவைச் சேர்ந்த பழம்பெரும் தத்துவஞானி மற்றும் எழுத்தாளர் ஆவார். பண்டைய சீனாவின் மிக முக்கியமான மெய்யியலாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் தனியொருவரா அல்லது ஒரு குழுவா என்பது போன்ற உறுதிப்படுத்தப்படாத மர்மமான தகவல்களால் இவரது பிறந்த தேதி கூட இன்னும் சரியாக அறியப்படாமல் உள்ளது. சீனாவின் மிகவும் புகழ்பெற்ற சமய தத்துவக் கோட்பாடான தாவோயிசத்தின் நிறுவனர் இவரே. ஜென் சிந்தனைகளுக்கு அடிப்படையாக விளங்கிய இவரது தத்துவங்கள் இன்றும் அதிகமானோரால் விரும்பி படிக்கப்படுகின்றன.
நீங்கள் ஒருவரால் ஆழமாக நேசிக்கப்படும்போது உங்களுக்கு வலிமை கிடைக்கின்றது. நீங்கள் ஒருவரை ஆழமாக நேசிக்கும்போது உங்களுக்கு தைரியம் கிடைக்கின்றது.
வார்த்தைகளில் உள்ள கருணை நம்பிக்கையை உருவாக்குகிறது; சிந்தனையில் உள்ள கருணை ஆழ்ந்த அறிவை உருவாக்குகிறது; கொடுத்தலில் உள்ள கருணை அன்பை உருவாக்குகிறது.
வாழ்க்கை என்பது இயற்கை மற்றும் தன்னிச்சையான மாற்றங்களைக் கொண்ட தொடர். அவற்றை எதிர்த்து செயல்படக்கூடாது.
எளிமை, பொறுமை, கருணை ஆகிய மூன்று விஷயங்களே உங்களின் மிகப்பெரிய பொக்கிஷங்களாக இருக்கின்றன.
ஒரு பெரிய நாட்டை ஆள்வது என்பது ஒரு சிறிய மீனை சமைப்பதை போன்றது; அதிகப்படியாக கையாளும்போது கெட்டுவிடும்.
மற்றவர்களை அடக்கி ஆளுதல் வலிமை; உங்களை அடக்கி ஆளுதலே உண்மையான சக்தி.
சுகாதாரம் மிகப்பெரிய சொத்து; மனநிறைவு மிகப்பெரிய புதையல்; நம்பிக்கை மிகப்பெரிய நண்பன்.
அனைத்து எளிதான விஷயங்களும் அதற்கான எளிதான தோற்றத்தை கொண்டிருப்பதாகவே இருக்கின்றன.
கடினமான விஷயங்களை அவை எளிதானதாக இருக்கும்போது செய்யுங்கள்; மிகப்பெரிய விஷயங்களை அவை சிறியதாக இருக்கும்போது செய்யுங்கள்.
செல்லும் திசையை நீங்கள் மாற்றவில்லை என்றால், அதன் முடிவு தொடங்கிய இடத்திற்கே வரலாம்.
உண்மையான வார்த்தைகள் அழகானவை அல்ல, அழகான வார்த்தைகள் உண்மையானவை அல்ல; நல்ல வார்த்தைகள் வசப்படுத்துபவை அல்ல, வசப்படுத்தக்கூடிய வார்த்தைகள் நல்லவை அல்ல.
ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு அடியிலேயே தொடங்குகின்றது.