ஒரு நாள் கூட மின்சாரம் இல்லாமல் நம் வாழ்க்கை இயங்காது என்ற சூழலுக்கு வந்துவிட்டோம். அதிகரிக்கும் மின்சார தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் பயன்பாட்டை எவ்வாறு அதிகரிப்பது என்பது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 2040-ம் ஆண்டு எந்த ஆற்றல் மூலங்கள் உலகின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் என்ற ஆய்வை மெக்கன்ஸி நிறுவனம் நடத்தியுள்ளது.
தற்போது நிலக்கரி 41 சதவீதம் மின்சார தேவையை பூர்த்தி செய்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்த ஆய்வின் படி 2040-ம் நிலக்கரி மூலம் 31 சதவீத மின்சாரத்தை மட்டுமே பூர்த்தி செய்து கொள்ள முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள்தான் மிகப்பெரிய அளவில் மின்சாரத்தேவையை பூர்த்தி செய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.