வணிக வீதி

நான்கு நாட்கள் வேலை, மூன்று நாட்கள் விடுமுறை

செய்திப்பிரிவு

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் ஜப்பான் கிளையில் வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலை, மூன்று நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தை 2019ம் ஆண்டு பரிசோதித்துப் பார்த்தது. மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் பணியாளர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக நேரம் செலவிட வாய்ப்பு அமைந்தது. இதனால் வேலையில் அவர்களது செயல்திறன் அதிகரித்தது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்தது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பரிசோதனை முயற்சியாகத்தான் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால், சென்னையைச் சேர்ந்த ‘பெரோ’ என்ற பன்னாட்டு நிறுவனம் 2017ம் ஆண்டே வாரத்துக்கு நான்கு நாட்களை வேலை, மூன்று நாட்கள் விடுமுறை திட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டது. முதலில் அதன் பயணியாளர்களே பயந்தார்கள் ‘எப்படி இது சாத்தியம், நான்கு நாடுகளுக்குள் வேலைகளை எப்படி முடிப்பது’ என்று.

ஆனால், அவர்கள் நினைத்தற்கு மாறாக, நிறுவனத்தின் உற்பத்தித் திறன் 200 மடங்கு அதிகரித்தது. ஆனால், தற்போது மத்திய அரசு முன்வைக்கும் நான்கு நாட்கள், வேலை மூன்று நாட்கள் விடுமுறை திட்டமானது மேற்கூறிய நடைமுறைக்கு மாறானது. ஏனென்றால் மத்திய அரசின் திட்டமானது ஆறு நாட்களின் வேலை நேரத்தை (48 மணி நேரம் ) நான்கு நாட்களுக்கு (நாளொன்றுக்கு 12 மணி நேரம்) மாற்றுகிறது. இது பணியாளர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கூடுதல் அழுத்தத்துக்குத்தான் தள்ளுமே தவிர, நிறுவனத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவாது. பணியாளர்களை வேலைச் சிறையிலிருந்து விடுவிக்கவும் செய்யாது.

SCROLL FOR NEXT