ஆட்டோமொபைல் துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஜெர்ம னியின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது தவறுக்கு பிராயச் சித்தம் தேட முடிவு செய்துள்ளது.
சாப்ட்வேரில் மோசடி செய்து புகை அளவில் தில்லுமுல்லு செய்த இந்நிறுவனம் இப்போது அனைத்து கார்களிலும் இன்ஜினை மாற்றித் தர முடிவு செய்துள்ளது.
மொத்தம் 1.10 கோடி கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளது. இவை அனைத் துக்கும் இது தொடர்பாக அடுத்த சில நாள்களில் தனது வாடிக்கையா ளர்களுக்கு இந்நிறுவனம் அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது. அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார் நிறுவனத்துக்கு புதிதாக தலைமைப் பொறுப்பேற்றுள்ள மத்தியாஸ் முல்லர்.
இவ்விதம் அனைத்து கார்களுக்கும் இன்ஜினை மாற்றித் தந்தால் இந்நிறு வனத்துக்கு 650 கோடி டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம் தொடங்கப்பட்டு 78 ஆண்டுக்கால வரலாற்றில் இந்நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய களங்கம் இதுவாகும். சர்வதேச சந்தையில் இந்நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போனதோடு ஜெர்மனியின் பொருளாதாரம் பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிறுவனத் தயாரிப்பு களில் 40 சதவீதம் ஐரோப்பிய நாடு களுக்கு ஏற்றுமதியாகிறது.
இதனால் ஜெர்மன் அரசு அக்டோபர் 7-ம் தேதிக்குள் உரிய மாற்று நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் கார்கள் 50 லட்சமும், 21 லட்சம் ஆடி கார்களிலும், 12 லட்சம் ஸ்கோடா கார்களிலும், 18 லட்சம் பிற வர்த்தக வாகனங்களிலும் இத்தகைய சாஃப்ட்வேர் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 1.10 கோடி கார்களை திரும்பப் பெற்று அவற்றுக்கு இன்ஜின் மாற்றித் தருவது என்பது ஆட்டோமொபைல் துறையில் மிகப் பெரிய நடவடிக்கையாக இருக்கும் என்றே தெரிகிறது.
இதற்கு முன்பு டொயோடா நிறுவனம் ஒரு கோடி கார்களை இதேபோல திரும்பப் பெற்றது. அந்நிறுவனத் தயாரிப்புகளில் ஆக்சிலரேட்டரில் கோளாறு ஏற்பட்டதைக் கண்டுபிடித்து அவற்றை மாற்றித் தந்தது டொயோடா. இத்தகைய நடவடிக்கை 2009 2010-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல டகடா ஏர் பேக்குகளில் ஏற்பட்ட பிரச்சினைக்காக பல லட்சக் கணக்கான கார்களை திரும்பப் பெற்று மாற்றித் தந்தது ஹோண்டா.
நிறுவனங்கள் தயாரிக்கும் கார்களின் பாகங்களில் பழுது ஏற்பட்டால் அதை மாற்றித் தரும் நடவடிக்கை வழக்கமான ஒன்று. ஆனால் சுற்றுச் சூழலை பாதிக்கும் புகை அளவில் மோசடி செய்து அதில் நிறுவனம் சிக்கியிருப்பது இதுவே முதல் முறை. அனைத்து கார்களுக்கும் இன்ஜினை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மாற்றித் தந்தாலும் இந்நிறுவனம் இழந்த புகழை மீட்ட முடியுமா என்பது சந்தேகமே.
கார்களின் பாகங்களில் பழுது ஏற்பட்டால் அதை மாற்றித் தரும் நடவடிக்கை வழக்கமான ஒன்று. ஆனால் சுற்றுச் சூழலை பாதிக்கும் புகை அளவில் மோசடி செய்து அதில் நிறுவனம் சிக்கியிருப்பது இதுவே முதல் முறை.