1872 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர் புகழ்பெற்ற தத்துவவாதியான பெட்ரண்ட் ரஸல். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் கணிதவியலாளர் மற்றும் சிறந்த சமூக சீர்திருத்தவாதியும் கூட. தனது தத்துவங்களால் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியவர்.
சமுதாயம் மற்றும் அரசியல் எண்ணங்களில் ஈடுபாட்டுடனும், போருக்கு எதிரான மன நிலையுடனும் செயல்பட்டார். 1950 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பெற்றவர். விடாப்பிடியான கொள்கைகளுடன் வாழ்ந்த ரஸல், இங்கிலாந்தின் ஈடு இணையற்ற சிந்தனையாளராக போற்றப்படுகிறார்.
அன்பினால் ஊக்கமளிக்கப்படும் மற்றும் அறிவினால் வழிநடத்தப்படும் வாழ்க்கையே ஒரு நல்ல வாழ்க்கையாகிறது.
மனித குலத்தை மீட்க தேவையான ஒரே விஷயம் ஒத்துழைப்பு மட்டுமே.
யார் சரியானவர் என்பதை போர் தீர்மானிப்பதில்லை, மாறாக யார் வெளியேறுகிறார் என்பதை மட்டுமே தீர்மானிக்கின்றது.
இந்த உலகம் முழுவதும் நிரம்பியுள்ள மாய விஷயங்களானது, அவற்றை கூர்மையடையச் செய்யும் நமது அறிவாற்றலுக்காக பொறுமையாகக் காத்துக் கொண்டிருக்கின்றது.
நம்பிக்கைக்குத் தேவையான நல்ல அடித்தளம் இல்லாதபோது, மோசமான ஒன்றை கொண்டு திருப்தி அடைய வேண்டியிருக்கும்.
உங்களுக்கு என்ன தெரியும் என்பது அறிவியல்; உங்களுக்கு என்ன தெரியாது என்பதே தத்துவம்
சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய அனைத்து விஷயங்களும் சிறந்தவையே.
தீவிரமான நம்பிக்கைகள் தீவிரமான துன்பங்களில் இருந்தே பிறக்கின்றன.
மற்றவர்களின் ரகசிய நல்லொழுக்கங்களைப் பற்றி யாரும் கிசுகிசு பேசுவதில்லை.
பயத்தினை வென்று அதனை வெற்றிக்கொள்வதே ஞானத்தின் தொடக்கமாகும்.
நீங்கள் அனுபவித்து இழந்த நேரமானது உண்மையில் வீணடிக்கப்பட்ட நேரமாகாது.
மது போதை என்பது தற்காலிக தற்கொலையே.