1564-ம் ஆண்டு முதல் 1616-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஆங்கில எழுத்தாளர். உலகின் மிகச்சிறந்த நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் அறியப்படுகிறார். நகைச்சுவை மற்றும் சோகம் ஆகிய இரண்டையும் தனது நாடகத்தில் பிரதிபலித்தவர்.
இவரது நாடகங்கள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, நடத்தப்பட்டும் வருகின்றது. இவரது படைப்புகள் ஆங்கில மொழியின் புகழ்பெற்ற படைப்புகளாக விளங்குகின்றன. 400 ஆண்டுகளுக்கு முன் உருவான இவரது படைப்புகள் இன்றும் பெரும்புகழ் பெற்று உலக மக்களால் போற்றப்படுகின்றன.
> அளவுக்கு மீறிய நல்ல விஷயங்கள் கெட்ட விஷயங்களாகவே மாறுகின்றது.
> துன்பங்கள் வரும்போது தனியாக வருவதில்லை, அவை மொத்தமாகவே வருகின்றன.
> நீங்கள் கண்ணீருடன் இருந்தால், இப்பொழுதே அதை சிந்த தயாராக இருங்கள்.
> பொற்காலம் என்பது நமக்கு முன்னாள் உள்ளதே தவிர நமக்கு பின்னால் இல்லை.
> நல்லது அல்லது கெட்டது என்று எதுவும் இல்லை, நமது எண்ணமே ஒரு விஷயத்தை அவ்வாறு மாற்றுகின்றது.
> வைத்துக்கொள்ள எதுவும் இல்லையென்றால் இழப்பதற்கும் எதுவுமில்லை.
> எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், சிலரிடம் நம்பிக்கை வையுங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.
> பாவத்தினால் சிலர் உயர்கிறார்கள், நேர்மையினால் சிலர் வீழ்ச்சி அடைகிறார்கள்.
> ஒரு நிமிட தாமதத்தை விட, குறித்த நேரத்திற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு செல்வது சிறந்தது.
> ஒரு தவறான சண்டையில் உண்மையான வீரம் இருக்க முடியாது.
> எது செய்து முடிக்கப்பட்டதோ, அதை ஒருபோதும் மாற்ற முடியாது.
> பலவற்றை கேளுங்கள், ஒரு சிலவற்றை மட்டும் பேசுங்கள்.