1937ஆம் ஆண்டு பிறந்த லூ ஹோல்ட்ச் முன்னாள் அமெரிக்க கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளர். மேலும், இவர் மிகச்சிறந்த கால்பந்து விளையாட்டு ஆய்வாளரும் கூட. இவரது பயிற்சியளிக்கும் முறை மற்றும் வீரர்களை ஊக்குவிக்கும் திறன் ஆகியவை இவருக்கு சிறந்த பெயரைப் பெற்றுத்தந்தன.
ஆண்டுதோறும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களிடையே உரையாற்றுபவர். சுயமுனேற்ற புத்தகங்கள் உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார். கௌரவ டாக்டர் பட்டம் உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
* ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் குறைந்தது ஒருமுறையாவது தோல்வியை அனுபவிக்கவேண்டும் என்று நினைக்கிறன்; அதிலிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.
* நமக்கான எல்லா வாய்ப்புகளும் நம்மைச் சுற்றியே உள்ளன, சில நேரங்களில் அவற்றை நாம் சரியாக அங்கீகரிப்பதில்லை.
* அனைவரின் வாழ்விலும் துன்பம் வந்து செல்கிறது, அதிலிருந்து எப்படி கற்றுக்கொண்டீர்கள் என்பதே விஷயம்.
* நேற்றைய செயல் உங்களுக்கு பெரிதாக தெரிந்தால், இன்று நீங்கள் எதையும் செய்யவில்லை என்று அர்த்தம்.
* உங்கள் பிரச்சினைகளை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள்; 80% பேர் அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை மற்ற 20% பேர் அதை எண்ணி மகிழ்ச்சி அடைவர்.
* இந்த உலகில் எதுவும் சாத்தியமற்றதல்ல என்பதை உங்கள் மனதில் நிறுத்தி நேர்மறையான எண்ணங்களை கொண்டிருந்தால் எல்லாம் சாத்தியமே.
* வாழ்க்கையானது, உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது பத்து சதவீதம், அதற்கு உங்களுடைய பதில் என்ன என்பதே தொண்ணூறு சதவீதம்.
* வெற்றியாளர்கள் கடின உழைப்பை வெற்றியாக மாற்றக்கூடியவர்கள், தோல்வியடைந்தவர்களோ அதை தண்டனையாக பார்ப்பவர்கள்.
* ஒரு செயலைச் செய்வதற்கு உங்களிடமுள்ள சக்தியே திறன்; என்ன செய்கிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பது ஊக்கம்; அதை எவ்வளவு நன்றாக செய்கிறீர்கள் என்பதை தீர்மானிப்பது அணுகுமுறை.
* வெறும் பேச்சினால் நான் ஒருபோதும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை, கேள்விகளை கேட்கும்போது மட்டுமே விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.