வணிக வீதி

வெற்றி மொழி: சாமுவேல் ஜான்சன்

செய்திப்பிரிவு

1709ஆம் ஆண்டு முதல் 1784 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த சாமுவேல் ஜான்சன் ஒரு ஆங்கில எழுத்தாளர். ஆங்கில இலக்கியத்திற்கு பெரும் பங்களிப்பினை அளித்தவர். கவிஞர், கட்டுரையாளர், பதிப்பாசிரியர், இலக்கிய விமர்சகர், வாழ்க்கை வரலாற்றாசியர் மற்றும் அறநெறியாளர் போன்ற பன்முக திறமைக்கு சொந்தக்காரர். ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

இவரது அகராதியானது 1755 ஆம் ஆண்டு வெளியானது. இவரது ஆங்கில இலக்கிய விமர்சனம், அதன் உண்மைத்தன்மைக்காகப் பெரிதும் பேசப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் மிக பிரபலமான இலக்கியவாதிகளில் ஒருவராக விளங்கினார்.

$ திட்டமிடுவதற்கு கடினமானதாக இருக்கும் பல விஷயங்கள், செயல்படுத்துவதற்கு எளிதானதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

$ மனிதன் மட்டுமே அழுகையுடன் பிறந்து, புகாருடன் வாழ்ந்து, ஏமாற்றத்துடன் இறக்கின்றான்.

$ வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதே, அனைத்து லட்சியங்களுக்குமான இறுதி முடிவு

$ சூரிய ஒளியின் பிரகாசத்தை அனுபவிக்க வேண்டுமானால், கண்டிப்பாக நிழலின் குளுமையை விட்டுவிட வேண்டும்.

$ உங்கள் ரகசியங்களை காப்பது என்பது ஞானமாக இருக்கலாம் ஆனாலும், மற்றவர்களுக்கு அது மடத்தனமானது என்பதையும் எதிர்பார்த்தே இருக்கவேண்டும்.

$ மற்ற எல்லா பண்புகளையும் விட சிறந்தது தைரியமே; ஏனெனில் உங்களிடம் தைரியம் இல்லாதபோது, மற்ற பண்புகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது.

$ இந்த உலகம் மிகப்பெரிய மாடிப்படிக்கட்டு போன்றது, இதில் சிலர் மேலே போகிறார்கள் மற்றும் சிலர் கீழே போகிறார்கள்.

$ எங்கு துயரம் புதியதாக இருக்கின்றதோ, அங்கு அதை திசை திருப்பும் எந்த முயற்சியும் எரிச்சலடைவதில் மட்டுமே முடியும்.

$ சிரமங்களோடு போராடி அவற்றை கைப்பற்றுவதே மனிதகுலத்தின் மிக உயர்ந்த வெற்றியாகும்.

$ எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் மூலம் வாங்கப்படுகின்றது.

$ முற்றிலும் நன்மையே செய்யாதவனை ஒருவன் எப்படி நடத்துகிறான் என்பதிலேயே அவனைப் பற்றிய உண்மையான கணிப்பு உள்ளது.

SCROLL FOR NEXT