1865 ஆம் ஆண்டு முதல் 1939 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த வில்லியம் பட்லர் ஈட்ஸ், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர். இளம் வயதிலேயே கவிதைகளைப் படிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். ஈர்க்கும் எழுத்துநடையில் எழுச்சியூட்டும் கவிதைகளைப் படைத்தவர். இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இலக்கியவாதிகளில் ஒருவராக அறியப்படுபவர்.
அயர்லாந்து இலக்கிய மேம்பாட்டுக்கான உந்து சக்தியாக விளங்கினார். இரண்டு முறை அயர்லாந்து நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினராக இருந்துள்ளார். இலக்கியத்துக்கான நோபல் பரிசினை 1923 ஆம் ஆண்டு பெற்றார். ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிக்கு முன்னுரை எழுதியவர் இவரே.
இங்கே அந்நியர்கள் யாரும் இல்லை; நீங்கள் இதுவரை சந்திக்காத நண்பர்கள் மட்டுமே உள்ளனர்.
கல்வி என்பது, வெறுமனே ஒரு வாளியை நிரப்பும் விஷயமல்ல; அது நெருப்பை பற்றவைக்கும் விஷயம் போன்றது.
இரும்பை அடிக்க அது சூடாகும்வரை காத்திருக்க வேண்டாம், அடிப்பதன் மூலம் அதை சூடாக்குங்கள்.
மேதை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் வித்தியாசத்தை திறமையானது உணர்ந்தே இருக்கின்றது.
ஜாக்கிரதையாக மென்மையாக நட, ஏனென்றால் நீ நடப்பது என் கனவில்.
பொறுப்பானது கனவுகளில் இருந்தே தொடங்குகிறது.
அழகு மற்றும் அப்பாவித்தனம் ஆகியவற்றுக்கு எதிரிகள் கிடையாது.
எப்போதும் ஏற்படாத எதோ ஒன்றிற்கான நீண்ட தயாரிப்பே வாழ்க்கை.
விவேகமுள்ள மனிதனைப்போல் சிந்தனை செய்; ஆனால் மக்களின் மொழியில் தொடர்புகொள்.
துன்பமே ஞானத்தைக் கொண்டுவருமானால், நான் குறைந்த விவேகமுள்ளவனாகவே இருக்க விரும்புகிறேன்.
எதை விவரிக்க முடிகின்றதோ அது கவிதை அல்ல.
மகிழ்ச்சியானது ஒரு தனிமையான உந்துவிசையினைப் போன்றது.
வெறும் வாய்ச்சொல்லானது கற்பனையில் வேலை செய்வதைப் போன்றது.