1803 ஆம் ஆண்டு முதல் 1882 ஆண்டு வரை வாழ்ந்த ரால்ப் வால்டோ எமர்சன் அமெரிக்காவைச் சேர்ந்த கட்டுரையாளர், கவிஞர், சொற்பொழிவாளர் மற்றும் எழுத்தாளர். தனது சிந்தனைகளை கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக வெளிக்கொணர்ந்தவர். எமர்சனின் எழுத்துப் பாணியானது புரிந்துகொள்ள கடினமானதாக சம காலத்தவர்களால் கருதப்பட்டது.
அமெரிக்காவின் மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவராக விளங்கிய எமர்சனின் படைப்புகள், பிற்காலத்திய எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் சிறந்த முன்னோடியாக விளங்கின. எமர்சனின் படைப்புகள், பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்க இலக்கிய, மத மற்றும் சிந்தனை ஆகியவற்றில் முக்கிய ஆவணங்களாகக் கருதப்படுகிறது.
வலிமையற்றவர்கள் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைக்கின்றார்கள்; வலிமை வாய்ந்தவர்களோ, காரணம் மற்றும் விளைவை நம்புகிறார்கள்.
நீங்கள் ஏற்கெனவே சாதித்த விஷயங்களைத் தாண்டி, வேறு எதையாவது செய்ய முயற்சிக்காதவரை உங்களால் ஒருபோதும் வளர்ச்சியடைய முடியாது.
ஒருபோதும் தோல்வியடையாமல் இருப்பதில் நமக்குப் பெருமை இல்லை; ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் எழுவதிலேயே இருக்கின்றது.
ஏற்கெனவே உள்ள பாதையில் பயணிக்காதீர்கள். மாறாக, பாதையே இல்லாத இடத்தில் பயணித்து தடத்தை விட்டுச்செல்லுங்கள்.
ஒவ்வொரு நாளும் ஆண்டின் சிறந்த நாளென்று உங்கள் இதயத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.
எதைப் பார்க்கத் தயாராக இருந்தார்களோ, அதை மட்டுமே மக்கள் பார்க்கின்றார்கள்.
ஒரு நண்பனைப் பெறுவதற்கான ஒரே வழி, நாம் ஒருவருக்கு நண்பராக மாறுவதுதான்.
ஆண்கள் பொதுவாக தங்களின் தாயின் உருவாக்கத்தைப் பொருத்தே இருக்கின்றார்கள்.
எதைச் செய்வதற்கு அதிகம் பயப்படுகிறீர்களோ, அதையே எப்போதும் செய்யுங்கள்.
உணர்ச்சி வெளிப்பாடு இல்லாத அழகு சலிப்பைத் தரக்கூடியது.
ஆர்வம் இல்லாமல் அடைந்த எதுவும், எப்போதும் சிறந்தது அல்ல.