வணிக வீதி

வெற்றி மொழி: லூயிசா மே அல்காட்

செய்திப்பிரிவு

1832-ம் ஆண்டு பிறந்த லூயிசா மே அல்காட் அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியர், கவிஞர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய “லிட்டில் வுமன்” என்னும் நாவலின் வாயிலாக பெரிதும் அறியப்பட்டவர். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நாவல், இன்றும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் மத்தியில் பிரபலமாக உள்ளது.

இந்த நாவலைத் தழுவி மேடை நிகழ்சிகள், தொலைக்காட்சி நிகழ்சிகள் மற்றும் திரைப்படங்கள் பலமுறை எடுக்கப்பட்டுள்ளன. பெண்களின் வாக்குரிமை போன்ற சீர்திருத்த இயக்கங்களில் தன் வாழ்நாள் முழுவதும் தீவிரமாக ஈடுபட்டவர். சிறந்த பெண்ணியவாதியான அல்காட் 1888-ம் ஆண்டு தனது 55-வது வயதில் பக்கவாதத்தின் காரணமாக மறைந்தார்.

* எனது கப்பலை எவ்வாறு செலுத்துவது என்பதை நான் கற்றுக்கொண்டிருப்பதால் புயல்களுக்கு நான் பயப்படவில்லை.
* உங்களுக்குத் தெரிந்தவற்றைச் செய்யுங்கள், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.
* நம்பிக்கை உடையவர் வலிமையானவர்; சந்தேகப்படுபவர் பலவீனமானவர்.
* அன்பு என்பது ஒரு சிறந்த அழகுபடுத்துபவரைப் போன்றது.
* நல்ல புத்தகங்கள், நல்ல நண்பர்களைப் போலவே, குறைவானவை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டவை.
* எளிமையான விஷயங்களில் அழகைக் கண்டறியும் சக்தி வீட்டை மகிழ்ச்சியாகவும், வாழ்க்கையை அழகாகவும் ஆக்குகிறது.
* ஒரு உண்மையான நண்பர் என்பவர் ஒரு வலுவான பாதுகாப்பு ஆகும்.
* எந்தவொரு எழுதப்பட்ட புத்தகத்தையும் விட மனித மனதில் அதிக மர்மங்கள் நிறைந்திருக்கின்றன.
* அன்புக்கு தகுதியுள்ளவராக இருங்கள், அன்பு வரும்.
* கர்வம் மிகச்சிறந்த மேதைகளை அழித்துவிடுகிறது.
* எந்த மண்ணிலும் வளரக்கூடிய மலர்தான் அன்பு.
* வலுவான நம்பிக்கைகள் என்பவை சிறந்த செயல்பாடு களுக்கான தொடக்கமாகும்.
* சில புத்தகங்கள் மிகவும் பழக்கமானவை, அவற்றைப் படிப்பது மீண்டும் வீட்டுக்கு வருவதைப் போன்றது.
* முழுமையாக மலரும்போது வாழ்க்கை, அன்பு இரண்டும் மிகவும் விலைமதிப்பற்றவை.

SCROLL FOR NEXT