1905-ம் ஆண்டு பிறந்த ஜீன்-பால் சார்த்ரே பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த தத்துவஞானி ஆவார். மேலும், நாடக ஆசிரியர், நாவலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், அரசியல் ஆர்வலர், வாழ்க்கை வரலாற்றாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகர் போன்ற பன்முகத் திறனுடையவர்.
இவரது படைப்புகள் சமூகவியல், விமர்சனக் கோட்பாடு மற்றும் இலக்கிய ஆய்வுகளில் தாக்கத்தையும், தொடர்ந்து இந்த துறைகளில் செல்வாக்கு செலுத்துபவையாகவும் உள்ளன. இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்துவிட்டார். இருபதாம் நூற்றாண்டு பிரெஞ்சு தத்துவத்தின் முதன்மையான நபர்களில் ஒருவராக விளங்கிய சார்த்ரே, 1980-ம் ஆண்டு மறைந்தார்.
# எப்படி வாழ்வது என்பதைத் தவிர, மற்ற அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
# உங்களுக்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பதுடன் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே சுதந்திரம்.
# ஒருவர் தான் தோற்றதாக நினைக்கும் போரே, ‘இழந்த போர்’ என்பதாகும்.
# விரக்தியின் மறுபக்கத்தில் வாழ்க்கை தொடங்குகிறது.
# நாம் முக்கியமானவர்கள் என்பது நம்முடைய முடிவுகளில் மட்டுமே உள்ளது.
# வார்த்தைகள் என்பவை தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கிகள்.
# நாம் விரும்பும் நபர்களை நாம் மதிப்பீடு செய்வதில்லை.
# நாம் நினைப்பதை விடவும் வார்த்தைகள் அதிக சக்தி வாய்ந்தவை.
# மனிதனுடைய இயல்பு மற்றும் அவனுடைய தேர்வுகளுக்கு அவனே முழு பொறுப்பு.
# நமக்கு என்ன வேண்டும் என்பது நமக்கு தெரிவதில்லை.
# மிகவும் கடினமான வேலை சிறந்த வேலை அல்ல; மாறாக நீங்கள் எதை சிறப்பாக செய்கிறீர்களோ அதுவே சிறந்த வேலை.
# ஒவ்வொரு வார்த்தைக்கும் விளைவுகள் உண்டு.
# உங்களுடைய மதிப்பீடுதான் உங்களையும் மதிப்பிடுகிறது மற்றும் உங்களை வரையறுக்கவும் செய்கிறது.