வணிக வீதி

மஹாராஜா எக்ஸ்பிரஸ்

செய்திப்பிரிவு

இந்தியாவின் வட மேற்கு பகுதிகளில் சுற்றுலா செல்ல இந்திய ரயில்வே இந்த சொகுசு ரயிலை இயக்குகிறது. முக்கியமாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்களை இணைக்கிறது. 1982ல் ராஜஸ்தான் மாநில சுற்றுலா மேம்பாட்டுக்காக ``பிளேஸ் ஆன் வீல்ஸ்’’ என இந்த சேவை தொடங்கப்பட்டது. 2010ல் தான் முழுமையாக மேற்கு இந்திய சுற்றுலாவுக்கு என்று மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கொண்டு வரப்பட்டது.

உலகின் மிக சொகுசான சுற்றுலா விருதை 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் பெற்றுள்ளது. ஐரோப்பாவின் ஓரியண்ட் சொகுசு ரயிலுக்கு இணையாக இந்த ரயில் பயணம் இருக்கும். அக்டோபர் முதல் ஏப்ரல் மாதங்களில் இயக்கப்படுகிறது.

பயணிகள் ஒவ்வொருவருக்கும் உலகத்தரத்திலான சொகுசு அறை, தனித்தனியாக பாத்ரூம், எல்இடி டிவி, வை-பை வசதிகளுடன் ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையான அனுபவம் கிடைக்கும்.

இந்த ரயிலில் பயணம் செய்பவர்களை பயணிகள் என்று அழைப்பதில்லை. விருந்தினர்கள் என்றே அழைக்கின்றனர். சிவப்பு கம்பள வரவேற்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்படுவார்கள்.

விருந்தினர்களின் தேவைக்கு ஏற்ப கொழுப்புகள் இல்லாத உணவுகள், ஜெயின் உணவுகள், மன்னர்கள் கால சைவ, அசைவ உணவுகள், வட இந்திய,தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்படும். ராஜா கிளப் என்றொரு தனிபெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அரண்மனை போன்ற இந்த பெட்டியில் உயர் ரக மதுபான வகைகள் பரிமாறப்படும்.

உணவு, மன்னர்கள் காலத்து உபசரிப்பு முறை, அரண்மனை போன்ற ரயில் பெட்டிகளின் உள் அலங்கார வடிவமைப்பு போன்றவை பயணிகளை பழைய காலத்துக்கே கொண்டு செல்லும். டீலக்ஸ் கேபின், ஜூனியர் சூட்ஸ், சூட்ஸ், பிரசிடெண்டல் சூட்ஸ் என வசதிக்கு ஏற்ப புக்கிங் செய்து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT