வணிக வீதி

சிகே மோட்டார்ஸின் எலெக்ட்ரிக் மாடல்கள்

செய்திப்பிரிவு

மின்சார வாகனங்களுக்கான சந்தை மெல்ல ஆரம்பித்திருக்கிறது. பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்துவருகின்றன. இருசக்கர மின்சார வாகனங்களில் புதிய நிறுவனங்கள் பல கால்பதித்து வருகின்றன. அந்த வகையில் திருப்பூரைச் சேர்ந்த சிகே மோட்டார் நிறுவனம் லித்தியம் பேட்டரியில் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றில் ஸ்கூட்டர்கள், மொபெட்டுகள் மற்றும் சைக்கிள்கள் ஆகியவை அடங்கும். இந்த வாகனங்கள் ஹைதராபாத் ஐ‌ஐ‌டியில் செயல்படுத்தப்பட்ட இன்குபேட்டர் திட்டத்தில் உருவான பியூர்-இ‌வி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளன. இவை லித்தியம்- அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றன.

மாதம் 5,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனுடன் கோயமுத்தூரில் ஆலை ஒன்றை சிகே மோட்டார்ஸ் அமைக்கிறது. சில மாதங்களில் ஆலை உற்பத்தி வேலைகளைத் தொடங்கும். விரைவில் சந்தைகளில் சிகே மோட்டார்ஸின் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT