1864-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், அமெரிக்காவைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானி, கல்வியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். பருத்திக்கான மாற்று பயிர்கள், மண்ணை மேம்படுத்துவதற்கான நுட்பங்கள் மற்றும் மண் சரிவைத் தடுக்கும் முறைகள் ஆகியவற்றை தீவிரமாக முன்னெடுத்தவர். மேலும், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஊக்குவிப்புக்கான செயல்பாடுகள் போன்றவற்றிலும் ஈடுபட்டவர். தனது பணிகள் மற்றும் சாதனைகளுக்காக கவுரவ டாக்டர் பட்டம் உட்பட பல்வேறு விருதுகளையும் கவுரவங்களையும் பெற்றுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிக முக்கியமான கறுப்பின விஞ்ஞானியாக மதிப்பிடப்பட்டவர்.
* எங்கு பார்வை இல்லையோ, அங்கு நம்பிக்கை இல்லை.
* சுதந்திரத்தின் தங்க கதவைத் திறக்க கல்வியே முக்கிய திறவுகோல்.
* சாதனைக்கு குறுக்குவழி எதுவும் இல்லை.
* வாழ்க்கைக்கு முழுமையான தயாரிப்பு தேவை.
* தோல்விகளில் தொண்ணூற்றொன்பது சதவீதம் சாக்குப்போக்கு சொல்லும் பழக்கமுடையவர் களிடமிருந்து வருகிறது.
* வாழ்க்கையின் பொதுவான விஷயங்களை நீங்கள் அசாதாரணமான முறையில் செய்யும்போது, உலகத்தின் கவனத்தை நீங்கள் ஈர்க்கிறீர்கள்.
* நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து, உங்களிடம் உள்ளதைக் கொண்டு தொடங்குங்கள்.
* புதிய முன்னேற்றங்கள் என்பவை ஒரு படைப்பாற்றல் மிக்க மனதின் தயாரிப்புகள்.
* நீங்கள் எதன்மீது அன்பு செலுத்துகிறீர்களோ, அது அதன் ரகசியங்களை உங்களுக்காக திறக்கும்.
* கெட்ட சகவாசத்துடன் இருப்பதை விட, தனியாக இருப்பதே சிறந்தது.
* உறவுகளைப் புரிந்துகொள்வதே கல்வி.
* கிட்டத்தட்ட எல்லாவற்றுக்கும் ஒரு பயன்பாடு உள்ளது.