1818-ம் ஆண்டு பிறந்த ஃபிரடெரிக் டக்ளஸ் அமெரிக்காவைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி, சொற்பொழிவாளர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அடிமைத்தனத்திலிருந்து தப்பித்த இவர், பின்னாளில் அடிமைத்தன ஒழிப்பு இயக்கத்தின் தேசியத் தலைவராகப் பணியாற்றினார்.
பெண்களின் வாக்குரிமை, உரிமைகள், அமைதி, நிலச் சீர்திருத்தம், இலவச பொதுக் கல்வி, மரண தண்டனை ஒழிப்பு மற்றும் பல்வேறு சீர்திருத்த காரணங்களுக்காக பாடுபட்டவர். தீவிர அடிமைத்தன எதிர்ப்பு செயற்பாட்டாளரான இவர், தனது திறமையான சொற்பொழிவுக்காக பெரிதும் அறியப்பட்டார்.
மாரடைப்பின் காரணமாக 1895-ம் ஆண்டு தனது 77-வது வயதில் மறைந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குமிக்க ஆப்பிரிக்க அமெரிக்கராகக் கருதப்படுகிறார்.
# உழைக்கும் மக்கள் அனைத்தையும் பெறாமல் போகலாம், ஆனால் அவர்கள் பெரும் எல்லாவற்றுக்கும் நிச்சயமாக உழைக்க # வலுவிழந்த மனிதர்களை சரிசெய்வதை விட, வலுவான குழந்தைகளை உருவாக்குவது எளிதானது.
# போராட்டம் இல்லை என்றால், எவ்வித முன்னேற்றமும் இல்லை.
# மனிதர்கள் காற்றை விதைக்கும்போது, அவர்கள் சூறாவளியை அறுவடை செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது பகுத்தறிவு.
# தேசம் நேர்மையான, உண்மையுள்ள மற்றும் நல்லொழுக்க முள்ளதாக இருக்கும்போது மட்டுமே தேசத்தின் வாழ்க்கை பாதுகாப்பானது.
# நான் விரும்பிய காரியங்களை என்னால் செய்ய முடியாது என்பதைக் கண்டுபிடிக்கும் வரை நான் ஒரு அடிமை என்று எனக்குத் தெரியாது.
# கறுப்பின மனிதனின் துயரத்தால் வெள்ளை மனிதனின் மகிழ்ச்சியை வாங்க முடியாது.
# நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பயனுள்ளதாக நம்மால் மாற முடிந்தால் மட்டுமே நாம் கடந்த காலத்துடன் செயல்பட வேண்டும்.
# சுதந்திரமான பேச்சை அடக்குவது இரட்டை தவறு. இது கேட்பவரின் உரிமைகளையும், பேச்சாளரின் உரிமைகளையும் மீறுகிறது.
# மனிதாபிமானமற்ற ஒன்று தெய்வீகமானதாக இருக்க முடியாது.
# ஒருமுறை நீங்கள் படிக்கக் கற்றுக்கொண்டால், என்றென்றும் நீங்கள் சுதந்திரமாக இருப்பீர்கள்.
# அறிவு ஒரு மனிதனை அடிமையாக இருக்கத் தகுதியற்றவனாக ஆக்குகிறது.