மாருதியின் அட்டகாசமான செடான் மாடலான சியாஸ் பிஎஸ் 6 தரத்தில் வெளியாகியுள்ளது. 2020 ஏப்ரல் 1 என்ற கெடு தேதிக்கு முன்னதாகவே பெரும்பாலான நிறுவனங்கள் பிஎஸ் 6 தரத்தில் தங்களது தயாரிப்புகளை போட்டி போட்டுக்கொண்டு சந்தையில் அறிமுகம் செய்துவருகின்றன.
மாருதி இதுவரை 5 லட்சத்துக்கும் மேலான பிஎஸ் 6 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சியாஸ் மாடல் மாருதி வெளியிடும் 11-வது பிஎஸ் 6 மாடலாகும்.
இதன் பேஸ் சிக்மா மேனுவல் வேரியன்ட்டின் ஆரம்ப விலை ரூ.8.31 லட்சமாகவும், டாப் வேரியன்டான ஆல்ஃபா மேனுவல் ட்ரிம் ரூ.9.97 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று வேரியன்ட்களில் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
ஆட்டோமெடிக் வேரியன்ட்டின் ஆரம்ப விலை ரூ.9.97 லட்சத்திலிருந்து டாப் ஸ்பெக் ரூ.11.09 லட்சம் வரை உள்ளது. தற்போது புதிதாக மாருதி சியாஸ் எஸ் என்ற வேரியன்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஆல்ஃபா மேனுவல் ட்ரிம் வேரியன்ட்டிலும் மேம்பட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிளாக் பூட் மவுன்ட்டட் ஸ்பாய்லர் தரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.10.08 லட்சமாக உள்ளது.