வணிக வீதி

மஹிந்திராவின் குறைந்தவிலை எலெக்ட்ரிக் கார்

செய்திப்பிரிவு

தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை விரிவடையத் தொடங்கியுள்ளது. இருந்தபோதிலும் அவற்றின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகூட ரூ.1 லட்சத்தைத் தொடுகிறது.

இந்தச் சூழலில்தான் மஹிந்திரா நிறுவனம் குறைந்தவிலையில் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த உள்ளது. மஹிந்திராவின் தயாரிப்பான கேயூவி100 மாடல் தான் தற்போது எலெக்ட்ரிக் மாடலாக வெளிவர உள்ளது.

வரும் ஏப்ரலில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார்ஸ் 40 கிலோவாட்ஸ் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 130 முதல் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். இதன் விலை ரூ.9 லட்சத்துக்கு குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT