வணிக வீதி

புதிய டாடா டியாகோ

செய்திப்பிரிவு

வரும் ஜனவரி 22-ல் டாடா நிறுவனம் தனது பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான ஆல்ட்ரோஸை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து அடுத்தகட்ட அறிமுகத்துக்கும் தயாராகி வருகிறது. டாடா என்ட்ரி நிலை மாடலாக உள்ள டாடா டியாகோ மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அறிமுகமாக உள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வரவுள்ள இந்த டாடா டியாகோ தோற்றத்தில் சில மாற்றங்களுடன் வர உள்ளது. மெல்லிய ஹெட்லைட், கவர்ச்சிகரமான கிரில், சற்று தூக்கப்பட்ட பானெட் வடிவமைப்பு உள்ளிட்டவை அவற்றில் சில. உட்புறத்திலும் ஸ்டைலிங் எலிமென்ட்ஸ் கூடுதலாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

கனெக்டிவிட்டி, இன்ஃபோடெயின்மென்ட் ஆகியவையும் சந்தையின் போட்டிக்கு ஏற்ப இந்த செக்மன்டில் பயன்படுத்தப்படலாம். பட்ஜெட் கார்களில் ஒன்றான டாடா டியாகோ மேம்படுத்தப்பட்டு வருவதால் இதற்கான வரவேற்பு நன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

SCROLL FOR NEXT