வணிக வீதி

வெற்றி மொழி: ஆர்தர் கொனன் டொயில்

செய்திப்பிரிவு

1859-ம் ஆண்டு பிறந்த ஆர்தர் கொனன் டொயில், ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர் மற்றும் மருத்துவர் ஆவார். உலகப் புகழ்பெற்ற ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் இவரே.

சிறுவயதிலேயே புத்தகங்கள் மீதும், கதை சொல்வதிலும் ஆர்வமுடையவராக விளங்கினார். ஹோம்ஸ் கதைகளைத் தவிர, கவிதைகள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், அறிவியல் மற்றும் கற்பனை புனைகதைகள் ஆகியவையும் இவரது படைப்புகளில் அடங்கும்.

துப்பறியும் புனைகதை துறையின் பெரும் மாற்றங்களுக்கு பங்களித்தவராக இவர் அறியப்படுகிறார். 1930-ம் ஆண்டு தனது 71-வது வயதில் மாரடைப்பின் காரணமாக மறைந்தார்.

* சிறிய விஷயங்கள் முடிவில்லா முக்கியத்துவத்தைக் கொண்டவை என்பது என்னுடைய நீண்டகால கோட்பாடாகும்.
* காலவரையற்ற சந்தேகத்தை விட எந்த உண்மையும் சிறந்தது.
* எங்கு கற்பனை என்பது இல்லையோ, அங்கு திகில் என்பதும் இல்லை.
* ஒருவரின் அறியாமை அவரது அறிவைப் போலவே குறிப்பிடத்தக்கதாகும்.
* உங்களுக்குச் சொந்தமான சிறிய எண்ணிக்கையிலான நல்ல புத்தகங்களுடன் வாழ்க்கையைத் தொடங்குவது ஒரு சிறந்த விஷயம்.
* நீங்கள் பார்க்கிறீர்கள்; ஆனால் கவனிப்பதில்லை.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாரும் கவனிக்காத வெளிப் படையான விஷயங்களால் உலகம் நிறைந்துள்ளது.
* புத்தகங்களின் மீதான அன்பு கடவுள்களின் சிறந்த பரிசுகளில் ஒன்றாகும்.
* கல்வி ஒருபோதும் முடிவுறுவதில்லை. இது பாடங்களின் தொடர்.
* மனிதனின் மனம் கண்டுபிடிக்கும் எதையும்விட வாழ்க்கை மிக விசித்திரமானது.
* துக்கத்துக்கான சிறந்த மாற்று மருந்து, வேலை.
* உணர்ச்சிபூர்வமான குணங்கள் தெளிவான பகுத்தறிவுக்கு முரணானவை.
* நம்மில் மிகச் சிறந்தவர்கள் கூட சில நேரங்களில் தூக்கி எறியப்படுகிறார்கள்.

SCROLL FOR NEXT