உலகம் முழுவதுமே கார் சந்தையில் செடான், ஹேட்ச் பேக் கார்களின் விற்பனை குறைந்து எஸ்யுவிகளின் விற்பனைதான் அதிகரித்துவருகிறது.
இது பிரீமியம் பிராண்டான ‘மினி’யையும்விட்டுவைக்கவில்லை. மினி பிராண்டில் கன்ட்ரிமேன் மட்டுமே எஸ்யுவி ஆக உள்ளது. ஆனாலும் அதன்விலையுடன் ஒப்பிடுகையில் அளவில் சிறயதாக உள்ளஎஸ்யுவியை வாங்க பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தயங்குகிறார்களாம்.
எனவே மினி தனது கிளப்மேன் மாடலின் அடுத்த தலைமுறை வெர்சனை எஸ்யுவியாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.தற்போதுள்ள கிளப்மேன் இந்தியாவில் 2016ல் அறிமுகமானது.
2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்192 ஹெச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. கிளப்மேன் எஸ்யுவியாக வரும்பட்சத்தில் பிரீமியம் எஸ்யுவிகளாக இருக்கும் பிஎம்டபிள்யு, ஆடி போன்றவற்றுக்குப் போட்டியாக விளங்கும்.