வணிக வீதி

வெற்றி மொழி: ஆபிரகாம் மாஸ்லோ

செய்திப்பிரிவு

1908-ம் ஆண்டு பிறந்த ஆபிரகாம் மாஸ்லோ அமெரிக்காவைச் சேர்ந்த உளவியலாளர். மக்களிடம் உள்ள நேர்மறையான குணங்களில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியமைக்காக பெரிதும் அறியப்படுகிறார்.

தனது இளமைப் பருவத்தில் பெரும்பாலான நேரங்களை நூலகங்களிலேயே செலவழித்துள்ளார். அலையண்ட் சர்வதேச பல்கலைக்கழகம், பிராண்டீஸ் பல்கலைக்கழகம், புரூக்ளின் கல்லூரி மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். கடுமையான மாரடைப்பின் காரணமாக 1970-ம் ஆண்டு தனது 62-வது வயதில் மறைந்தார். இருபதாம் நூற்றாண்டின் முக்கிய உளவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

* உங்களால் இருக்க முடிந்த அளவைவிட குறைவாக இருப்பதற்கு நீங்கள் திட்டமிட்டால், உங்கள் வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் நீங்கள் மகிழ்ச்சியற்றவராக இருப்பீர்கள்.
* ஒருவரின் சொந்த திறன்களே அவரின் ஒரே போட்டியாளர் ஆவார்.
* உங்களிடம் ஒரு சுத்தியல் மட்டுமே இருந்தால், ஒவ்வொரு பிரச்சினையையும் ஒரு ஆணியாகவே பார்க்க முனைவீர்கள்.
* ஒரு நபரிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேவை என்னவென்றால், தன்னைப்பற்றிய அவரது விழிப்புணர்வை மாற்றுவதே.
* உளவியல் அறிவியலானது நேர்மறையான பக்கத்தை விட எதிர்மறையில் மிகவும் வெற்றிகரமாக உள்ளது.
* தற்போதைய தருணத்தில் இருக்கும் திறனானது மன ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
* ஒரு மனிதன் என்னவாக இருக்க முடியுமோ, அவன் அவ்வாறாகவே இருக்க வேண்டும்.
* ஒரு முழு மனிதனாக இருப்பது கடினமானது, அச்சுறுத்தலானது மற்றும் சிக்கலானது.
* வளர்ச்சியை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்; பயத்தை மீண்டும் மீண்டும் வெல்ல வேண்டும்.
* வாழ்க்கை என்பது பாதுகாப்புக்கும் ஆபத்துக்கும் இடையில் தேர்ந்தெடுக்கும் ஒரு தொடர்ச்சியான செயல்பாடாகும்.
* எந்த தருணத்திலும் நமக்கு இரண்டு வழிகள் உள்ளன: வளர்ச்சியில் முன்னேற அல்லது பாதுகாப்பிற்கு பின்வாங்க.

SCROLL FOR NEXT