வணிக வீதி

டாடாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி

செய்திப்பிரிவு

தற்போது முன்னணி வாகன நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், டாடா அதன் முதல் எலெக்டிரிக் எஸ்யுவியை அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நெக்ஸான் இவி என்ற அதன் முதல் எலக்ட்ரிக் எஸ்யுவியை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய உள்ளது. ஆரம்பகட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் விற்பனைக்கு வர உள்ளது.

குறிப்பாக மும்பை, புணே, பெங்களூரு, அகமதாபாத், புதுடெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, பிற நகரங்களுக்கு விற்பனை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெக்ஸான் பேஸ்லிஃப்ட் மாடலை அடிப்படையாகக் கொண்டே நெக்ஸான் இவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ.15 லட்சம் முதல் ஆரம்பமாகும்.

SCROLL FOR NEXT