இந்திய கார் சந்தையின் ஜாம்பவனாக இருக்கும் மாருதி சுசூகி தனது கார்களின் விலையை ஜனவரியில் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.
கார்களைத் தயாரிப்பதற்கான தேவையான மூலப் பொருட்கள் பலவற்றின் விலை உயர்ந்திருப்பதால் கார்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி இருப்பதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே ஆட்டோமொபைல் துறை பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. இந்நிலையில் மூலப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்திருப்பது உற்பத்தி செலவை அதிகரித்திருக்கிறது.
செலவு அதிகரிப்பு தொழில் செயல்பாடுகளையும் லாப வளர்ச்சியையும் கணிசமாக பாதிக்கிறது. இதை சரிகட்ட விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று நிறுவனம் கூறுகிறது.
மாருதி எல்லாவிதமான பயன்பாடுகளுக்கும், எல்லாவிதமான மாடல்களிலும் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. மாருதி என்ட்ரி மாடல் ஆல்டோ முதல் உச்சபட்ச மாடல் எக்ஸ் எல் 6 வரை அனைத்து மாடல்களின் விலையும் வரும் 2020 ஜனவரியில் உயர்த்தப்படவிருக்கிறது.