இருசக்கர வாகன சந்தையில் டிவிஎஸ் நிறுவனத்தின் அதிக வரவேற்பைப் பெற்ற மாடல்கள் என்றால் அது அபாச்சியும், ஜூபிடரும் என்று சொல்லலாம். 2020 மார்ச்சுக்குள் பிஎஸ் 6 தர நிர்ணயம் வாகனத்துறையில் கட்டாயம் என அறிவித்துள்ள நிலையில் இந்த இரண்டு மாடல்களையும் புதுப்பொலிவுடன் தரம் உயர்த்தி அறிமுகப்படுத்தியுள்ளது டிவிஎஸ் நிறுவனம். முதலில் அபாச்சியின் ஆர்டிஆர் 160 4வி மற்றும் 200 4வி மாடல்கள் பிஎஸ் 6 தரத்துடன் அறிமுகமாயின.
அதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே ஜூபிடர் ஸ்கூட்டரும் பிஎஸ் 6 தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலில் டிரம் பிரேக் வெர்ஷன் ரூ. 99,950-க்கும் டிஸ்க் பிரேக் வெர்ஷன் ரூ.1.03 லட்சத்துக்கும் அறி
முகமாகியுள்ளது. 200 4வி மாடல் ரூ. 1.24 லட்சமாகும். இவை முந்தைய மாடல்களைக் காட்டிலும், ரூ. 3000, ரூ.8000 மற்றும் ரூ.10,000 விலை அதிகமாகும்.
அதேபோல் ஜூபிடர் முந்தைய மாடலைக் காட்டிலும் ரூ.8 ஆயிரம் அதிகரித்து ரூ. 67,911-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ் 6 தரத்தில் அறிமுகமாகியுள்ள இந்த மாடல்களில் சில தோற்ற மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக எல்இடி விளக்குகள் இவற்றில் தரப்பட்டுள்ளன. புதிய ஜூபிடரில் புதிய நிறங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.