உலகின் பணக்கார நாடுகளை வகைப்படுத்தியுள்ளது சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்). 188 நாடுகள் இதில் உறுப்பு நாடுகளாக உள்ளன.
நாடுகளின் மக்கள் தொகை, பொருளாதார வளர்ச்சி, தனிநபர் வருமானம், வேலை வாய்ப்பற்றோர் சதவீதம், சர்வதேச வர்த்தகம், ஏழ்மை அகற்றம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் பணக்கார நாடுகளை பட்டியலிட்டுள்ளது.
ஏற்கெனவே பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளான ஜி8 நாடுகளில் சில நாடுகள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால் வளரும் நாடுகளோடு சேர்ந்து அடையாளம் காணப்பட்ட ஜி20 நாடுகள் பட்டியலில் இந்த பணக்கார நாடுகள் இடம்பிடித்துள்ளன.