வணிக வீதி

சத்தமில்லாமல் ஒரு அறிமுகம் கேடிஎம் 250 அட்வென்சர்

செய்திப்பிரிவு

கேடிஎம் சத்தமில்லாமல் அதன் புதிய தயாரிப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பெயர்; கேடிஎம் 250 அட்வென்சர். சாகச பிரியர்களின் தேர்வாக இருக்கும் பிராண்டுகளில் ஒன்று கேடிஎம்.

இந்நிலையில் பல்வேறு கூடுதல் சிறப்பம் சங்களை, ஏதுவான விலையில் வழங்க வேண்டும் என்ற திட்டத்தின் வெளிப்பாடாகவே கேடிஎம் 250 வெளிவர உள்ளது.

இவ்வருட தொடக்கத்தில் நடைபெற்ற வாகனக் கண்காட்சியில் கேடிஎம் 390 அட்வென்சர் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கியே 250 அட்வென்ஜர் தயாரிக்கப்பட்டு உள்ளது.

சேஸிஸ், பாடி பேனல், ஸ்டீல் பிரேம் போன்றவை அனைத்தும் 390 அட்வென்ஜரில் இருப்பது போன்றே இதிலும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இன்ஜின், முகப்பு விளக்கு ஆகியவை மட்டும் மாற்றப்பட்டு உள்ளன. முந்தைய மாடலான 250 டியூக் மாடலில் உள்ள இன்ஜின்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதன் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் 30 ஹார்ஸ் பவரையும், 24 என்எம் டார்க்கையும் கொண்டிருக்கும். 320 மிமீ சிங்கிள் டிஸ்க் முன்புறத்திலும், 230 மிமீ டிஸ்க் பின்பகுதியிலும் என அதன் பிரேக் அமைப்பு உள்ளது. 250 டுயூக்கைவிட இதன் எடை 7 கிலோ கூடுதல். மொத்தமாக 250 அட்வென்சரின் எடை 156 கிலோவாக இருக்கும். இதன்விலை, ரூ.2.30 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT