வணிக வீதி

வெற்றி மொழி: வால்ட் விட்மன்

செய்திப்பிரிவு

1819-ம் ஆண்டு முதல் 1892-ம் ஆண்டு வரை வாழ்ந்த வால்ட் விட்மன் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர் மற்றும் சிறந்த மனிதநேயவாதி ஆவார். அமெரிக்க கவிதையுலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பத்தொன்பதாம் நூற்றாண்டு கவிஞர்கள் ஒருவராகவும், அமெரிக்க மற்றும் உலக புதுக்கவிதையின் முன்னோடியாகவும் கருதப்படுபவர் இவர். அரசியலில் ஈடுபாடு கொண்டவராக விளங்கிய விட்மன், அமெரிக்க அடிமை முறையினை எதிர்த்தார். தனது படைப்புகளிலும் இன அடிப்படையில் அனைவரும் சமம் என்ற கருத்தினை வலியுறுத்தியுள்ளார்

* எளிமை என்பது வெளிப்பாட்டின் மகிமை.
* மதிப்பீடு செய்பவராக இல்லாமல், ஆர்வமுடையவராக இருங்கள்.
* உங்களுக்குச் சொல்லப்பட்ட அனைத்தையும் மறுபரிசீலனை செய்யுங்கள்.
* உங்கள் ஆன்மாவை அவமதிக்கும் விஷயங்களை நிராகரியுங்கள்.
* என்னைப் பொறுத்தவரை, பகல் மற்றும் இரவின் ஒவ்வொரு மணி நேரமும் சொல்ல முடியாத ஒரு அதிசயம்.
* பிரபஞ்சத்தின் முழுக் கோட்பாடும் ஒரு தனி நபருக்குத் தடையின்றி இயக்கப்படுகிறது.
* எதிர்காலம் நிகழ்காலத்தை விட நிச்சயமற்றது.
* கள்ளங்கபடமற்ற மனப்பான்மை கொண்டவரின் அனைத்து தவறுகளும் மன்னிக்கப்படலாம்.
* அதிகம் எதிர்ப்பு தெரிவியுங்கள், கொஞ்சம் கீழ்படியுங்கள்.
* எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் அது மகிழ்ச்சியைத் தரட்டும்.
* அமைதி எப்பொழுதுமே அழகானது.
* வெற்றி பெற்ற அதே உணர்வில் போர்கள் இழக்கவும் செய்கின்றன.
* காணப்படாத விஷயங்களும் அதிகம் இங்கு உள்ளது என்பதை நான் நம்புகிறேன்.

SCROLL FOR NEXT