ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா ஆனிக்ஸ் என்ற அதன் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை நாட்கள் தொடர்ச்சியாக வர உள்ளதால் அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய தயாரிப்புகளை களமிறக்கி வருகின்றன.
அந்த வகையில் ஸ்கோடா நிறுவனமும் சென்ற மாதம் கோடியாக் ஸ்கவுட் என்ற மாடலை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசல் என இரு வகைகளிலும் வெளிவந்துள்ளது. பெட்ரோல் மாடலின், விலை ரூ.20 லட்சம் எனவும் டீசல் மாடலின், விலை ரூ.22 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மிகுந்த நேர்த்தியோடு வடிவமைக்கப்படு இருக்கும் ஆக்டோவியா ஆனிக்ஸ் ஹோண்டா சிவிக், டொயோட்டா கோரல்லா அல்டிஸ் மற்றும் ஹூண்டாய் எலன்ட்ரா ஆகியவற்றுக்கு போட்டியாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பெட்ரோல் இன்ஜின் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸையும், டீசல் இன்ஜின் 6ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸையும் கொண்டுள்ளது. வெள்ளை, நீலம், சிவப்பு என்ற மூன்று வண்ணங்களில் ஆக்டேவியா ஆனிக்ஸ் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 15 கிலோ மீட்டர் மைலேஜும், டீசல் இன்ஜின் 19 கிலோ மீட்டர் மைலேஜும் தரும் என்று கூறப்படுகிறது.