நெருங்கி வரும் பண்டிகைக் காலத்தை கணக்கில் கொண்டு, டாடா நிறுவனம் அதன் முந்தைய தயாரிப்பான டாடா டியாகோவை புதுப்பொலிவுடன் மீண்டும் அறிமுகம் செய்து இருக்கிறது. டியாகோவிலிருந்து டியாகோ விஸ் வெர்ஷன் பெரிய அளவில் வேறுபடவில்லை. வெளிப்புறம் மற்றும் உட்புற வண்ணங்களில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன் கிரில், அலாய் வீல், சைட் மிரர் ஆகியவற்றில் ஆரஞ்சு வண்னம் தீட்டப்பட்டு உள்ளது. இது பார்ப்பதற்கு நவீன தோற்றத்தை தருகிறது. அதேபோல், மேற்கூரை கருப்பு வண்ணமாக மாற்றப்பட்டுள்ளது. உட்புறத்தில் இருக்கைகள், ஏசி ஆகியவற்றில் ஆரஞ்சு நிறம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வண்ண ஒத்திசைவு அந்த காருக்கு சிறப்பு கவனத்தை அளிக்கிறது. இதுதவிர்த்து, குறிப்பிடத்தக்க அளவில் தொழில்நுட்ப ரீதியாக எந்த மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை. 1047 சிசி திறனைக் கொண்டிருக்கும் இதன் பெட்ரோல் இன்ஜின் 85 ஹார்ஸ் பவரை உற்பத்தி செய்யக் கூடியது. ஹேட்ச்பேக் மாடலான இது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை கொண்டிருக்கும். இதன் விலை ரூ.5.40 லட்சம் முதல் ஆரம்பமாகிறது.