வணிக வீதி

790 சிசி கேடிஎம் டியூக்

செய்திப்பிரிவு

இளைஞர்களிடையே வெகு சீக்கிரத்திலேயே பிரபலமாகிவிட்ட பைக் கேடிஎம்டியூக் அட்வென்சர் மற்றும் ஸ்போர்ட் ரைடிங் அனுபவத்துக்கு ஆசைப்படுபவர்களுக்கு மிகவும் பொருத்தமான பைக் என்று சொல்லலாம். பல்வேறு சிசி திறன்களில், பல்வேறு பயன்பாட்டுகளுக்கான மாடல்களை கேடிஎம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் டியூக்கின் நேக்கட் டிசைன், நிறம், பெர்பாமென்ஸ் மற்ற பைக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு விளங்குகிறது.

தற்போது 790சிசியில் டியூக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.8.64 லட்சம் என்ற நிலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் போட்டி பைக்குகளின் விலையைக் காட்டிலும் இது சற்று அதிக விலைதான். அதேசமயம் இதன் இன்ஜினும் பிஎஸ்4 தரத்தில்தான் உள்ளது.

இதன் பேரலல் ட்வின் இன்ஜின் 105 ஹெச்பி பவரையும், 86 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில் முழுமையான டிஎஃப்டி டிஸ்பிளே, யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் பிரீலோட் மோனோஷாக் ஆகிய வசதிகள் உள்ளன. இதன் எடை 169 கிலோகிராம். இந்த செக்மன்ட்டில் எடை குறைவான பைக் என்றால் அது டியூக்தான். இது தற்போது முக்கிய நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது.

SCROLL FOR NEXT