வணிக வீதி

அனைவருக்குமானதாக வருகிறது பல்சர் 125 நியான்

செய்திப்பிரிவு

பல்சர், பஜாஜ் நிறுவனத்தின் அடையாளம். 2001-ம் ஆண்டு முதன்முறையாக பல்சர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இருபது ஆண்டு காலங்களில் பஜாஜ் நிறுவனத் தயாரிப்பாக மக்கள் மனதில் நிலைத்திருப்பது பல்சர்தான். ஆரம்பத்தில் 135 சிசி, 150 சிசி என்று அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 220 சிசி வரை வந்து நிற்கிறது. இதனால் இளைஞர்களுக்கானதாக மட்டுமாக பல்சர் மாறியது. இந்நிலையில் அனைத்து வயதினரும் பயன்படுத்தும் வகையில் பல்சர் இருக்க வேண்டும் என்று நினைத்த பஜாஜ், தற்போது 125 சிசியில் பல்சர் 125 நியான் என்ற புதிய மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்திருக்கிறது. இது டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு வேரியன்ட்களில் வெளிவந்துள்ளது.

டிரம் பிரேக் மாடலின் விலை ரூ.64,000 எனவும், டிஸ்க் பிரேக் மாடலின் விலை ரூ.66,618 எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. நியான் புளூ, சோலார் ரெட், பிளாட்டினம் சில்வர் என்ற மூன்று வண்ணங்களில் வெளிவருகிறது. லிட்டருக்கு சராசரியாக 55 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் என்று கூறப்படுகின்றது. தற்போது சந்தையில் ஹோண்டா ஷைன் மற்றும் ஹீரோ கிளாமர் இரண்டும் முன்னணியில் இருக்கின்றன. விலை, மைலேஜ் என அனைத்திலும் அவை வாடிக்கையாளர்களின் தேர்வாக இருக்கிறது. இவற்றுக்கு போட்டியாகத்தான் பஜாஜ் நிறுவனம் பல்சர் 125 நியானை களமிறக்கி உள்ளது. வாடிக்கையாளர்கள் 125 நியானுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை காத்திருந்து பார்ப்போம்.

SCROLL FOR NEXT