வணிக வீதி

வெற்றி மொழி: மிகுவல் டி செர்வாண்டஸ்

செய்திப்பிரிவு

1547-ம் ஆண்டு முதல் 1616-ம் ஆண்டு வரை வாழ்ந்த மிகுவல் டி செர்வாண்டஸ் ஸ்பானிஷ் நாவலாசிரியர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். ஸ்பானிஷ் மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளராகவும், உலகின் புகழ்பெற்ற நாவலாசிரியர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்.

நாவல்களின் வரலாற்றில் செல்வாக்கு மிக்க படைப்பான டான் குயிக்சோட் என்னும் இவரது புகழ்பெற்ற நாவல் நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பல எழுத்தாளர்களின் படைப்புகளில் இவரது செல்வாக்கு காணப்படுவது இவரின் புகழுக்கு மற்றுமொரு சான்று.

# அன்பின் அமைதியான மொழிகள் கண்கள்.
# பூனைகளுடன் விளையாடுபவர்கள் தாங்கள் கீறப்படுவோம் என்பதை எதிர்பார்த்திருக்க வேண்டும்.
# உங்களால் சம்பாதிக்க ஆற்றல் உள்ள ஒன்றுக்கு ஒருபோதும் யாசகம் கேட்டு நிற்காதீர்கள்.
# முன்கூட்டியே தயாராக இருப்பது பாதி வெற்றிக்கு சமமானது.
# உங்களைப் பற்றிய அறிவு, மாயையிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
# விடாமுயற்சி என்பது நல்ல அதிர்ஷ்டத்தின் தாய் போன்றது, செயலற்ற தன்மை என்பது அதற்கு நேர்மாறானது.
# நீண்ட அனுபவத்தின் அடிப்படையிலான ஒரு குறுகிய வாக்கியமே பழமொழி.
# பயம் பல கண்களைக் கொண்டுள்ளது, அதனால் பாதாள விஷயங்களையும் பார்க்க முடியும்.
# எந்த தந்தையோ அல்லது தாயோ தங்கள் குழந்தைகளை அசிங்கமாக நினைப்பதில்லை.
# செல்வத்தை இழந்தவன் அதிகம் இழக்கிறான்; நண்பனை இழந்தவன் மேலும் அதிகமாக இழக்கிறான்; ஆனால் தைரியத்தை இழந்தவன் அனைத்தையும் இழக்கிறான்.
# காலம் அனைத்தையும் கனிய வைக்கிறது; எந்த மனிதனும் ஞானியாக பிறப்பதில்லை.
# தாமதம் எப்போதும் ஆபத்தை வளர்க்கிறது; ஒரு சிறந்த வடிவமைப்பை நீட்டிப்பது பெரும்பாலும் அதை அழிப்பதாகும்.
# சோம்பல் ஒருபோதும் ஒரு நல்ல விருப்பத்தை அடையும் நிலைக்கு வருவதில்லை.
# பொய்யை விட உண்மை தண்ணீருக்கு மேலே வரும் எண்ணெய்யைப் போல உயரும்.
# ஒரு மனிதன் விரக்தியடைவதை விட பெரிய முட்டாள்தனம் உலகில் இல்லை.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

SCROLL FOR NEXT