ஸ்கூட்டர் விற்பனையில் சுசூகி தீவிரமாக இருக்கிறது. இதன் சுசூகி ஆக்சஸ் 125 விளம்பரங்கள் ரொம்பவே பிரபலம். தற்போது இந்த சுசூகி ஆக்சஸ் 125 சில மாற்றங்களுடன் சந்தையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. டிரம் பிரேக் உள்ள அலாய் வீல்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை டிஸ்க் பிரேக் கொண்ட அலாய் வீல்கள் மட்டுமே இருந்தன. டிரம் பிரேக் இருந்த ஸ்கூட்டரில் ஷீட் மெட்டல் வீல்கள்தான் இருந்தன. ஆனால், தற்போது அலாய் வீல்கள் டிரம் பிரேக்குடன் அறிமுகமாகியுள்ளன.
ஒரு மாதத்துக்கு முன்பு சுசூகி ஆக்சஸ் 125 எஸ்இ என்ற மாடலை அறிமுகப்படுத்தியது. இதில் டாப் வேரியன்ட்டில் மட்டுமே டிஸ்க் பிரேக் தரப்பட்டது. தற்போது சிறப்பு எடிஷனில் டிரம் பிரேக்குடன் கிடைக்கிறது. விலை ரூ.61,590 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய சுசூகி ஆக்சஸ் 125 பேர்ல் சுசூகி டீப் புளூ, கிளாஸ் ஸ்பார்க்கில் பிளாக், மெட்டாலிக் மேட் ஃபிப்ராயின் கிரே, பேர்ல் மிராஜ் ஒயிட் ஆகிய நான்கு விதமான வண்ணங்களில் வருகிறது. இதில் உள்ள 124சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் 8.7 ஹெச்பி பவர், 10.2 என் எம்டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.