வணிக வீதி

வெற்றி மொழி: ஜோஷ் பில்லிங்ஸ்

செய்திப்பிரிவு

1818-ம் ஆண்டு முதல் 1885-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஜோஷ் பில்லிங்ஸ் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நகைச்சுவையாளர் ஆவார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மிகவும் பிரபலமான நகைச்சுவை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் விரிவுரையாளராக விளங்கியவர். பத்திரிகைகளுக்கான படைப்புகள் தவிர, பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். எழுத்துத்துறையில் வெற்றியடைவதற்கு முன்பு விவசாயம் மற்றும் நிலக்கரி சுரங்கப் பணிகளில் ஈடுபட்டவர். அன்றைய பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த தனது எழுத்துகளின்  சொற்பொழிவுகளையும் வழங்கியுள்ளார். இவர் பெரும்பாலும் புகழ்பெற்ற எழுத்தாளரான மார்க் டுவைனுடன் ஒப்பிடப்படுகிறார்.

* இந்த உலகில் தன்னை நேசிப்பதை விட உன்னை அதிகம் நேசிப்பது நாய் மட்டுமே.
* இளமையில் நாம் சிரமங்களுக்குள் செல்கிறோம். முதுமையில் சிரமங்கள் நமக்குள் வருகின்றன.
* மன்னிப்பு போன்ற முழுமையான பழிவாங்கல் வேறு எதுவும் இல்லை.
* ஒருவரிடம் நீங்கள் பெறக்கூடிய மிகச்சிறந்த வெற்றிகளில் ஒன்று, பணிவில் அவரை வெல்வதே.
* மறுப்பதற்கு கடினமான வாதங்களில் ஒன்று மவுனம்.
* மேதை என்பது நேர்த்தியான பொது அறிவை விடவும் வேறு ஒன்றும் இல்லை.
* ஒரு முட்டாளை தான் தவறு என்று நம்பவைப்பதற்கான சிறந்த வழி, அவனது சொந்த வழியில் அவனை அனுமதிப்பதே.
* காதல், தொலைநோக்கி மூலமாகத் தெரிகிறது; பொறாமை, நுண்ணோக்கி மூலமாகத் தெரிகிறது.
* தபால்தலை போல இருங்கள். நீங்கள் ஒன்றை அடையும் வரை, ஒரு விஷயத்தில் ஒட்டிக்கொள்ளுங்கள்.
* காரணம் பெரும்பாலும் தவறுகளைச் செய்கிறது, ஆனால் மனசாட்சி ஒருபோதும் செய்வதில்லை.
* நேர்மை என்பது யார் வேண்டுமானாலும் வைத்திருக்க முடிந்த மிக அரிதான செல்வமாகும்.
* நம்மைத் தவிர வேறு யாராலும் நம்மை இழிவுபடுத்த முடியாது.
* இன்று அனுபவிக்க முடிந்த ஒன்றை நாளை வரை தள்ளிவைக்க வேண்டாம்.
* பலவீனமான மனிதனை உங்கள் நண்பனாக மாற்றுவதை விட, உங்கள் எதிரியாக மாற்றுவதே நல்லது.

SCROLL FOR NEXT