வணிக வீதி

வந்துவிட்டது இளைஞர்களின் கனவு பைக்

செய்திப்பிரிவு

இத்தாலியைச் சேர்ந்த டுகாட்டி நிறுவனம் சீறிப்பாயும் மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் மல்டிஸ்டிராடா 1260 என்டியூரோ மாடல் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகத் திகழ்கிறது. இதில் முன்புறத்தில் 5 அங்குல தொடு திரை உள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் இது மேம்படுத்தப்பட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது. சாகசப் பிரியர்களின் தேர்வாக இந்த மோட்டார் சைக்
கிள் திகழும் என்பதில் சந்தேகமில்லை. இது 1262 சிசி திறன் கொண்டது. இந்திய சாலைகளில் அதிக திறன் கொண்ட பிரீமியம் மோட்டார் சைக்கிள் வரிசையில் இது இடம் பெற்றுள்ளது. 

இதில் வி-ட்வின் என்ஜின் உள்ளதால் இதன் ஆற்றல் 158 பிஎஸ் ஆக உள்ளது. அதேபோல 128 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டிருக்கும். இந்த மோட்டார் சைக்கிளின் 100 மீட்டர் டார்க் இழுவிசை 4 ஆயிரம் ஆர்பிஎம் வேகம் முதல் 6 ஆயிரம் வேகத்திலேயே எட்டப்படும். இது 6 கியர்களைக் கொண்டது. பல அதி நவீன மின்னணு தொழில்நுட்பமும் இதில் உள்ளது. இதில் வெகிக்கிள் ஹோல்ட் கண்ட்ரோல் (விஹெச்சி) பவர் மோட், டுகாட்டி சேவ்டி பேக் (ஏபிஎஸ் மற்றும் டிடிசி) உள்ளது. 

சாகசப் பிரியர்கள் வீலிங் செய்வதற்கு வசதியாக வீலிங் கண்ட்ரோல் (டிடபிள்யூசி) வசதியும் உள்ளது. சாலைகளில் ஓட்டும் நிலைகளைத் தேர்வு செய்வதற்கு வசதியாக ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் என்டியூரோ ஆகிய நிலைகள் உள்ளன. சாலைகளின் தன்மைக் கேற்ப இவற்றைத் தேர்வு செய்யலாம். வாகனம் சீறிப்பாய வசதியாக எடையும் சற்று குறைவாக அதே சமயம் ஸ்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் இதில் சைலன்ஸர் மிகவும் ஸ்லீக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் தோற்றப் பொலிவை மேலும் அழகுள்ளதாக்கியுள்ளது. 

முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் சீட் உயரம் 10 மி.மீ. குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உயரம் குறைவானவர்களும் இதை எளிதில் ஓட்ட முடியும். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக இதில் பானியர்ஸ் வைக்கும் வசதியும் உள்ளது. இந்த பிரீமியம் மோட்டார் சைக்கிளின் விலை ரூ.19.99 லட்ச
மாகும். இந்தியா முழுவதும் டுகாட்டிவிற்பனையகங்களில் இது கிடைக்கிறது. டிரையம்ப் டைகர் 1200, பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் அட்வெஞ்சர் ஆகிய மோட்டார் சைக்கிளுக்கு போட்டியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT