வணிக வீதி

ஹைபிரிட் மாடல் எம்பிவி வெல்ஃபயர்

செய்திப்பிரிவு

டொயோட்டா நிறுவனம் வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள வெல்ஃபயர் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த கார் அக்டோபர் மாதம் அறிமுகமாகிறது. 6 பேர் பயணிக்கும் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய டொயோட்டா முடிவு செய்துள்ளது. ஹைபிரிட் மாடல் என்பதால் இதை இறக்குமதி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்டுக்கு 2,500 கார்கள் வரை இறக்குமதி செய்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதை முதலில் பயன்படுத்திக் கொண்டது மெர் சிடஸ் பென்ஸ் நிறுவனம்தான். தற்போது டொயோட்டா நிறுவனமும் இதே வழியில் எம்பிவி வாகனமான வெல்ஃபயரை இறக்கு
மதி செய்து விற்பனை செய்ய உள்ளது. ஹைபிரிட் மாடல் என்பதால் இது பிரீமியம் செக்மென்டில் இடம்பெறும். இதன் விலை ரூ.80 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.

டொயோட்டா நிறுவனத்தின் ஆல்ஃபார்ட் மாடல் கார்தான் இந்தியாவில் வெல்ஃபயர் என்ற பெயரில் அறிமுகமாகிறது. இந்திய சாலைக்கென இதில் சில மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது. ஆல்ஃபார்ட் மாடல் கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்பகுதியில் ஸ்பிளிட் எல்இடி முகப்பு விளக்கு, பகலில் ஒளிரும் தன்மை கொண்ட டிஆர்எல் விளக்கு உள்ளது. முன்புற பம்பர் மற்றும் கிரில் அழகாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பனி சூழ்ந்த பகுதிகளில் பயணிக்கும்போது அதிக பிரகாசமான ஒளியை வீச ஃபாக் விளக்கும் இதில் உள்ளது. 

இது முழுக்க முழுக்க பெட்ரோல் மற்றும் பேட்டரி பவர்டிரெய்னைக் கொண்டது. 150 ஹெச்பி திறன் 2.5 லிட்டர்  இன்ஜினைக் கொண்டுள்ளது. இத்துடன் 143 ஹெச்பி திறன் கொண்ட மின் மோட்டாரும் உள்
ளது. இது ஒட்டுமொத்தமாக 145 ஹெச்பி திறனை வெளிப்படுத்தும். சிவிடி மூலமாக
நான்கு சக்கரங்களுக்கும் சுழற்சியை அளிக்கும். இதில் நடுவரிசை பயணிகள் சவுகர்யமாக பயணிக்கும் வகையில் இருக்கைகள் (ரெக்லைன்) வடிவமைக்கப்பட்டுள்ளன. காரில் ஸ்லைடிங் கதவுகள் இருப்பது காரினுள் ஏறி, இறங்குவதை எளிதாக்கியுள்ளது.

இதில் மூன்று பிரிவிலான ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி உள்ளது. பாதுகாப்புக்கு இதில் 7 ஏர் பேக்கு
கள் உள்ளன. பயணிகளின் பொழுது போக்குக்கு 10.2 அங்குல டிவி திரை உள்ளது. இதில் 360 டிகிரி சுழலும் கேமிரா உள்ளது. தொடக்கத்தில் 200 கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. பின்னர் இந்த மாடலுக்கு இருக்கும் வரவேற்பைப் பொருத்து கூடுதலாக இறக்குமதி செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சொகுசு கார்களை விரும்புவோருக்கு வெல்ஃ
பயர் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

SCROLL FOR NEXT