டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் முதல் எத்தனால் இருசக்கர வாகனத்தைக் கடந்த வாரம் அறிமுகப்
படுத்தியது. உலகம் முழுவதும் 35 லட்சம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபல மாடலான அபாச்சி ஆர்டிஆர் பெயரிலேயே இந்த மாடல் வெளிவந்துள்ளது. அபாச்சி ஆர்டிஆர் 200 எஃப்ஐ இ100 என்ற இந்த மாடல் ரூ.1.20 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை முதன்முதலில் 2018 ஆட்டோ கண்காட்சியில் டிவிஎஸ் நிறுவனம் காட்சிப்
படுத்தியது. தற்போது சந்தையில் பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக பேட்டரி, ஹைபிரிட் போன்றவற்றை முன்னெடுத்துவரும் நிலையில், எத்தனால் மற்றுமொரு மாற்று சக்தியாக சந்தையில் அறிமுகமாகியுள்ளது. எத்த
னாலை எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்பது பல காலமாகக் கூறப்பட்டுவந்த நிலையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் அதை செயல்படுத்தியுள்ளது. எத்தனால் உள்நாட்டில் எளிதில் உற்பத்தி செய்யப்படும் புதுப் பிக்கத்தக்க
ஆற்றலாகும்.
மேலும் எத்தனால் நச்சுத்தன்மை இல்லாத, எளிதில் மக்கக் கூடிய பாதுகாப்பான ஒன்றாகும். எனவே பெட்ரோலுக்கு மாற்றாக இது சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனால் மூலம் இயங்கும் இந்த முதல் இருசக்கர வாகனம் பெட்ரோல் பயன்படுத்தி இயக்க முடியாது. இது பெட்ரோலில் இயங்கும் அபாச்சி 200 4வி மாடலைவிட ரூ.9,000 மட்டுமே அதிகம். இது தற்போது சிறப்பு எடிஷனாக வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் உத்திரப்பிரதேசத்தில் இப்போது இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.
ஆனால், இந்தியாவில் எத்தனால் விற்பனை நிலையங்கள் இது வரையிலும் அமைக்கப்படவில்லை விரைவில் அமைக்கப்பட வாய்ப்புள்ளது. லிட்டர் எத்தனால் ரூ.52-55 என்ற நிலையில் விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பேட்டரி வாகனங்களின் விலை அதிகமாக இருக்கும்பட்சத்தில் வாங்கக்கூடிய விலை
யில் உள்ள இந்த அபாச்சி ஆர்டிஆர் 200 எத்தனால் மாடல் இருசக்கர வாகன சந்தையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தப்போவது நிச்சயம்.