1847ஆம் ஆண்டு பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி. சிறுவயதிலேயே கேள்வி கேட்கும் குணமும் எதையும் ஆராய்ச்சி செய்து பார்க்கும் பழக்கமும் அவரிடம் இருந்தது. மூன்றே மாதங்களில் பள்ளியிலிருந்து நின்ற எடிசனுக்கு அவரது தாயாரே பாடங்களைக் கற்றுக்கொடுத்தார்.
தனது வாழ்நாளில் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர். வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் என்றே வாழ்ந்து சுமார் ஆயிரத்து முன்னூறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்காட்டியவர். கண்டுபிடிப்புகளின் தந்தை என்று இன்றளவும் போற்றப்படுகிறார்.
1) வெற்றி பெறுவதற்கான மிகவும் சிறந்த வழி, எப்போதும் மற்றுமொரு முறை முயற்சிப்பதே.
2) உழைப்பு என்ற சீருடையில் இருப்பதால், வாய்ப்பானது பெரும்பாலான மக்களால் தவறவிடப்படுகின்றது.
3) நான் தோல்வி அடையவில்லை, வெற்றியடைய முடியாத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறேன்.
4) நீங்கள் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செய்யாத சில விஷயங்கள் பயனற்றவை என்று அர்த்தமல்ல.
5) நீங்கள் என்னவாக இருக்கின்றீர்கள் என்பதில்தான் உங்கள் மதிப்பு இருக்கிறதே தவிர நீங்கள் எதை வைத்துள்ளீர்கள் என்பதில் இல்லை.
6) நான் ஒருபோதும் கொல்லுவதற்கான ஆயுதங்களைக் கண்டுபிடிக்கவில்லை என்பதில் உண்மையில் எனக்கு பெருமை.
7) வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்பதை உணராததே பெரும்பாலான வாழ்க்கைத் தோல்விகளுக்குக் காரணம்
8) என்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் உழைப்பினால் கிடைத்ததே தவிர எதிர்பாராத விபத்துகளினால் வந்ததல்ல.
9) ஒரு சதவீதம் உத்வேகமும் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் வியர்வையும் சேர்ந்ததே மதிநுட்பம்.
10) மனிதனின் மனம் எதை உருவாக்க முடியுமோ, அவனது குணம் அதை கட்டுப்படுத்த முடியும்.
11) ஒரு செயலைச் சிறப்பாக செய்வதற்கு சிறந்த வழி, அதனை தேடிக்கண்டறிவதே.
12) ஒரு யோசனையின் மதிப்பு அதை பயன்படுத்துவதிலேயே இருக்கின்றது.