வணிக வீதி

கொடை நாடு

செய்திப்பிரிவு

உதகை அருகே இருக்கும் கொட நாடு என்று எண்ணி விட வேண்டாம். நன்கொடைகள் அளிப்பதில் முன்னணி வகிக்கும் நாடுகளைப் பற்றிய அலசல் இது.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களின் நலன், முன்னேற்றத்துக்காக கொடையளிக்கும் வழக்கம் இந்தியாவில் தொன்றுதொட்டு இருக்கிறது. கடையேழு வள்ளல்கள், கொடையில் சிறந்த கர்ணன் பிறந்த பூமி என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் நிகழ்காலத்தில் தர்ம சிந்தனை அல்லது பிறருக்கு கொடுக்கும் எண்ணம் குறைந்து வருகிறதா என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

உலகம் கொடுக்கும் குறியீட்டின்படி (டபிள்யூஜிஐ) இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதிலிருந்தே நமது வள்ளல் தன்மை புலனாகும்.

5 ஆண்டுகளாக சிஏஎப் (Charities Aid Foundation) என்ற அமைப்பு நாடுகளின் கொடைத் திறனை பட்டியலிடுகிறது.

135 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

3 அளவுகோல்கள் படி அதாவது பணம் அளித்தல், தொண்டு சேவைக்கு நேரம் செலவிடுதல் மற்றும் முகம் தெரியாதவர்களுக்கு உதவி செய்தல் ஆகியன அடிப்படையில் அளவிடப்பட்டது.

ஒவ்வொரு நாடும் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டன.

உலகின் 1 வல்லரசு, சட்டாம் பிள்ளை, அண்ணன் என்று பலராலும் பல அடைமொழிகளோடு அழைக்கப்படும் அமெரிக்காதான் கொடையளிப்பதிலும் முதலிடத்தில் உள்ளது.

79% அமெரிக்கர்கள் முன்பின் தெரியாதவர்களுக்கு உதவுகின்றனர்.

91% மியான்மர்வாசிகள் பணம் நன்கொடை அளிப்பதில் முன்னிலை வகிக்கின்றனர்.

10 பேரில் 9 பேர் புத்த மதத்தை பின்பற்றுபவர்களாக மியான்மரில் உள்ளனர். மதத்தினால் இவர்களிடையே தயாள குணம் ஏற்பட்டுள்ளது. நன்கொடையாக அளிப்பதில் மியான்மர் முதலாவதாக உள்ளது.

9-வது இடத்தில் இலங்கை உள்ளது. இங்கும் புத்த மதத்தை பின்பற்றுவோர் இருப்பதால் கொடை நாடுகளில் முதல் 10 இடங்களுக்குள் இலங்கை உள்ளது.

7-வது இடத்தில் மலேசியா உள்ளது. 2013-ம் ஆண்டு 71-வது இடத்தில் மலேசியா இருந்தது குறிப்பிடத்தக்கது.

10-வது இடத்தில் மிகச் சிறிய நாடான டிரினிடாட் டொபாகோ உள்ளது.

20 இடங்களுக்குள் பூடான், கென்யா, டென்மார்க், ஈரான், ஜமமைக்கா உள்ளிட்ட நாடுகள் வந்துள்ளன.

8 நாடுகள் 2013-ம் ஆண்டில் இடம்பெற்றிருந்தன. ஆனால் 2014-ம் ஆண்டில் சைப்ரஸ், பின்லாந்து, ஜெர்மனி, ஹாங்காங், லைபீரியா, கத்தார், தாய்லாந்து, துர்க்மினிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெறவில்லை.

வளர்ச்சியைடந்த ஜி 20 நாடுகளில் 5 நாடுகள் மட்டுமே நன்கொடை அளிக்கும் நாடுகள் பட்டியலில் முன்னிலையில் உள்ளன.

69-வது இடத்தில் இந்தியா உள்ளது.

SCROLL FOR NEXT