வணிக வீதி

வெற்றி மொழி: ஜான் மேனார்ட் கீன்ஸ்

செய்திப்பிரிவு

1883-ஆம் ஆண்டு பிறந்த ஜான் மேனார்ட் கீன்ஸ் ஓரு பிரிட்டிஷ் பொருளாதார மேதை. தொழில் சுழற்சி குறித்த பொருளாதார கோட்பாடுகளை ஆய்வு செய்து கண்டறிந்தவர். இருபதாம் நூற்றாண்டின் நவீன பேரியல் பொருளாதாரத்தின் தந்தை என்று கருதப்படுபவர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் இவருடைய கோட்பாடுகளை பல நாடுகள் கடைப்பிடிக்கத் தொடங்கின. டைம் பத்திரிகை இருபதாவது நூற்றாண்டில் உலகத்தில் மிகவும் செல்வாக்கு படைத்த 100 மனிதர்களில் ஒருவராக இவருடைய பெயரை பட்டியலிட்டது. எகனாமிஸ்ட் பத்திரிகை இவரை இருபதாம் நூற்றாண்டின் பிரசித்தி பெற்ற பொருளாதார நிபுணர் என்றது.

$ புதிய யோசனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிரமத்தை விட பழைய யோசனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம்.

$ “நீண்டகால அடிப்படையில்” என்பது நிகழ்காலத்தை மறக்கடிக்கும் தவறான தூண்டுதல்; நீண்ட காலத்தில் நாம் அனைவருமே இறந்துவிடுவோம்.

$ வெற்றிகரமான முதலீடு என்பது அடுத்தவர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்று துல்லியமாக எதிர்பார்ப்பதேயாகும்.

$ வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்கத்தெரிந்த அறிவே, லாபம் பெறும் வகையில் உபயோகப்படும் சிறந்த அறிவு.

$ உங்கள் மனப்போக்கை விட அதிக பாதிப்பை தருவது வேறு எதுவும் இல்லை.

$ எப்பொழுது என் தகவல்களில் மாற்றம் ஏற்படுகின்றதோ, அப்பொழுது முடிவுகளை நான் திருத்திக்கொள்கிறேன்.

$ முதலாளித்துவம் என்பது பொல்லாதவர்கள் பொல்லாத விஷயங்களை பலரின் நன்மைக்காக செய்வார்கள் என்று நம்புவதேயாகும்.

$ சில சமயம் தவறு செய்வதில் தவறேயில்லை; அதை நாம் தவறென்று கண்டுபிடிக்க முடிந்த வரையில்.

$ துல்லியமான தவறைவிட, சுமாரான சரியான விஷயங்களே சிறந்தது.

$ இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன.

$ பொருளாதாரப் பிரச்சினைகளை பின்னுக்குத்தள்ளி மனிதநேயம், மனித குணாதிசயம், மதம் போன்ற பிரச்சினைகள் குறித்து கவலைப்பட வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை.

SCROLL FOR NEXT