வணிக வீதி

தொழில்முனைவோர்களுக்கு பாலமாகத் திகழும் எம்எஸ்எம்இ

செய்திப்பிரிவு

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம் (எம்எஸ்எம்இ) 1954ல் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. சிறு தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு தொடங்கியது. மத்திய குறு சிறு தொழில்கள் அமைச்சகத்தால் இது நடத்தப்படுகிறது. தொடக்கத்தில் சிறு தொழில்கள் மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு என்கிற நோக்கத்தில்தான் செயல்பட்டு வந்தது.

குறுந்தொழில்களின் வளர்ச்சி சார்ந்து செயல்பாடுகள் விரிவடைய வேண்டிய தேவை எழுந்ததால் குறு சிறு மற்றும் நடுத்த தொழில்கள் மேம்பாடு நிறுவனமாக மாற்றம் அடைந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கான மண்டல அலுவலகங்கள் உள்ளன. மேலும் ஒரு மாநிலத்திலேயே பல மண்டல அலுவலகங்கள் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு உதவி வருகிறது. தமிநாட்டில் சென்னை தவிர, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி என மொத்தம் நான்கு இடங்களில் இதன் அலுவலகம் உள்ளது.

மாநில அரசு தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், மத்திய அரசும் தொழில்முனைவோர்களுக்கு நேரடியாக உதவி வருகிறது. தொழில் முனைவோர்களுக்கான மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் இந்த நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிறுவனம் புதிய தொழில் முனைவோர் உருவாக்கம், தொழில் மேம்பாடு சார்ந்து பயிற்சிகள், பயிற்சிக்கு பிந்தைய சேவைகளையும் வழங்குகிறது. மேலும் கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலியில் உள்ள அலுவலகங்கள் சார்பில் அந்த பகுதிகளிலும் தனித்தனியாக இதன் சேவைகளை கொண்டு சேர்க்கிறது.

தொழில்முனைவொர் மேம்பாட்டு பயிற்சிகள், திறன் வளர்ப்பு பயிற்சி, நிறுவன பதிவு, வாங்குபவர் விற்பவர் கூட்டங்கள் ஒருங்கிணைப்பு, தொழில்துறை சார்ந்த அறிக்கைகள், சந்தை உதவி, கருத்தரங்குகள், தொழில்நுட்ப ஆலோசனை, திட்ட அறிக்கை தயரிப்பில் உதவி மற்றும் பொதுவான பயிற்சி வகுப்புகள் என பல நிலைகளில் உதவிகரமாக இருக்கிறது.

தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு தொழில்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் பயிற்சிகளை வழங்குகிறது. மேலாண்மை மற்றும் சந்தையிடுதலை மேம்படுத்தும் பயிற்சி, தொழில் முனைவோர்கள் தங்களது தனித்திறனை மேம்படுத்தும் திட்டங்கள், பெண் தொழில் முனைவோர்கள் ஊக்குவிப்பு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் கீழ் கொள்முதல் உதவிகள், தேசிய அளவிலான விருதுகளுக்கு தொழில் முனைவோர்களை கொண்டு செல்வது. மற்றும் தொழில் போட்டிகளை சமாளிப்பதற்கான பயிற்சிகளையும் இந்த நிறுவனம் அளிக்கிறது.

காலத்துக்கு ஏற்ற நவீன தொழில் பயிற்சிகளை இந்த நிறுவனமே அளித்து வருகிறது. குறிப்பாக உற்பத்தி துறை சார்ந்த தொழில்கள் மட்டுமில்லாமல் சேவைத்துறை சார்ந்த பயிற்சிகளையும் அளித்து வருகிறது. பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக பல தொழில் வாய்ப்புகளையும் இந்த நிறுவனம் அளிக்கிறது.

சர்வதேச அளவில் இயந்திரங்கள் வாங்குவதற்கான முன் தயாரிப்பு உதவிகள், தொழில்முனைவோரின் கடன் வாங்கும் தன்மைக்கு ஏற்ப கடனுதவிக்கு ஏற்பாடு செய்தல், புதிய தொழில் நிறுவனத்தை தொடங்குவது போன்ற ஏற்பாடுகளையும் செய்கிறது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் தொழில் முனைவோர்களுக்கான உதவிகளை ஒருங்கிணைத்துக் கொடுக்கிறது. மத்திய அரசின் கிராம தொழில் வாரியம், மத்திய கயிறு வாரியம், அறிவியல் தொழில்நுட்ப துறை உள்ளிட்ட துறைகளோடு தொழில் முனைவோர்களை இணைக்கிறது. தவிர பல்வேறு துறைகளின் கீழ் மத்திய அரசின் மானியங்களுக்கான உதவிகளை பெற ஏற்பாடு செய்கிறது.

நவீன தொழில்நுட்ப தொழில்களுக்கான யோசனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஊக்குவிக்கிறது. ரசாயானம், மருந்து, உணவு, மின்னணு தொழில்நுட்பங்கள், செராமிக்ஸ், தோல் உள்ளிட்ட துறை துறை சார்ந்த பயிற்சிகள், சந்தை உதவி, தொழில்நுட்ப மேலாண்மை உதவிகளையும் அளிக்கிறது.

இ-கிளப்

தொழில் முனைவோர்களை ஒருங்கிணைக்கும் இ கிளப் என்கிற வகையிலும் எம்எஸ்எம்இ செயல்படுகிறது. தொழில் முனைவர்கள் தொடர்ச்சியாக சந்தித்து தங்களது பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதை சரிசெய்து கொள்ள உதவுகிறது. திறமைகளை ஒருங்கிணைப்பது. அவர்களுக்கான மேலாண்மை உதவி, போன்றவைகளையும் இந்த இ கிளப் செய்கிறது.

சென்னை தொடர்பு முகவரி

Director,
MSME Devlopement Institute,
Govt. of India, Ministry of MSME,
65/1, G.S.T. Road, Guindy,
Chennai-600 032.
Tamil Nadu.India.
தொடர்பு எண்: 044 2250 1011 /12 /13

SCROLL FOR NEXT