இந்தியாவில் மட்டுமல்ல ஆசிய பிராந்தியத்திலேயே ஆடம்பர பங்களாவாகக் கருதப்படுகிறது `அன்டிலியா’. இந்தியாவின் பெரும் பணக்காரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவருமான முகேஷ் அம்பானியின் பங்களாதான் இது. மும்பையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த பங்களா, இப்பிராந்தியத்தின் பெருமையை பறைசாற்றும் என்பதில் சந்தேகமில்லை.
உலகிலேயே ஒரு குடும்பத்தினருக்காக அதிக செலவில் கட்டப்பட்ட வீடு இதுவாகும். 2011-ம் ஆண்டு முதல் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இங்கு வசிக்கின்றனர்.
$ 3 ஹெலிபேட் வசதி உடையது. விமான நிலையங்களில் உள்ளதைப் போல ஏர் டிராபிக் கண்ட்ரோல் சிஸ்டம் (ஏடிசி) வசதி உள்ளது.
$ ஒவ்வொரு தளத்திலும் வித்தியாசமான வடிவமைப்புடன் விருந்தினர்களுக்காக போடப்பட்ட இருக்கைகளுடன் கூடிய வரவேற்பறைகள்.
$ உலகிலேயே ஒரு குடும்பத்தினருக்காக அதிக செலவில் கட்டப்பட்ட வீடு இதுவாகும். 2011-ம் ஆண்டு முதல் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இங்கு வசிக்கின்றனர்.
$ கிறிஸ்டல் சர விளக்குகள் கொண்ட மேடையுடன் கூடிய அறை. நிகழ்ச்சிகளை விருந்தினர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான விருந்தினர்களுக்கு உணவு சமைக்கும் சமையலறையும் உள்ளது.
$ 2008-ம் ஆண்டில் இதன் மதிப்பு 70 கோடி டாலர். இருந்தது. இப்போது இதன் மதிப்பு 100 கோடி டாலர் முதல் 200 கோடி டாலர் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. (இந்திய மதிப்பில் ரூ. 6,300 கோடி முதல் ரூ. 12,600 கோடியாகும்).
$ சிகாகோவைச் சேர்ந்த கட்டிடவியல் நிறுவனமான பெர்கின்ஸ் வில்ஸால் வடிவமைக்கப்பட்டது.
$ ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லெய்டன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இதைக் கட்டியது.
$ கார் நிறுத்துமிடத்தில் (2), விருந்தினர்களுக்கென (3), சர்வீஸ் லிப்ட் (2), குடும்பத்தினரின் பிரத்யேக உபயோகத்துக்கு (2) லிப்ட் உள்பட மொத்தம் 9 லிப்ட்கள் உள்ளன.
$ குடும்பத்தினருக்கென அரபிக் கடலை பார்க்கும் வகையில் 4 மேல் தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
$ ஒரு அறையின் தரையிலிருந்து மேற்கூரையைப் பார்த்தால் 5 நட்சத்திர ஹோட்டல் வரவேற்பறையைப் போல பிரமாண்டமாக இருக்கும்.
$ மிகவும் உயரமான மேற்கூரைகளை உடைய 27 தளங்களைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டது. இந்த உயரத்துக்கு 60 தளங்களைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பைக் கட்ட முடியுமாம். இதன் உயரம் 570 அடியாகும்.
$ ரிக்டர் அளவுகோலில் 8 அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டாலும் அதைத் தாக்குப் பிடிக்கும் வகையில் இது கட்டப்பட்டுள்ளது.
$ 4 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டது.
$ 6 அடுக்கு கீழ் தளங்களைக் கொண்டது.
$ அனைத்து கார்களையும் பராமரிப்பதற்கான சர்வீஸ் வசதியும் இங்கு உள்ளது.
$ இந்த வீட்டை பராமரிக்கும் பணியில் 600 ஊழியர்கள் உள்ளனர்.
$ விருந்தினர் தங்கும் அறைகள் உள்ளன. 50 குடும்பங்கள் தங்க முடியும்.
$ ஸ்பா, யோகா அரங்கம், பால் ரூம் (நடன அரங்கம்) சில நீச்சல் குளங்களும் இங்கு உள்ளன.
$ 3 தளங்களில் தொங்கும் தோட்டங்கள் உள்ளன.
$ 50 பேர் அமரும் வகையில் திரையரங்கம்
$ 6 அடுக்கு கார் நிறுத்துமிடத்தில் 168 கார்களை நிறுத்த முடியும்